பாரதியிடம் காதலை சொல்லும் வெண்பா, கண்ணம்மாவுக்கு திருமணம் செய்ய முடிவு எடுக்கும் லட்சுமி – இன்றைய எபிசோடு!

0
பாரதியிடம் காதலை சொல்லும் வெண்பா, கண்ணம்மாவுக்கு திருமணம் செய்ய முடிவு எடுக்கும் லட்சுமி - இன்றைய எபிசோடு!
பாரதியிடம் காதலை சொல்லும் வெண்பா, கண்ணம்மாவுக்கு திருமணம் செய்ய முடிவு எடுக்கும் லட்சுமி - இன்றைய எபிசோடு!

பாரதியிடம் காதலை சொல்லும் வெண்பா, கண்ணம்மாவுக்கு திருமணம் செய்ய முடிவு எடுக்கும் லட்சுமி – இன்றைய எபிசோடு!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பாவின் அம்மா பாரதியிடம் பேசியதை தொடர்ந்து வெண்பா பாரதி மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பது பற்றி பேச, மறுபக்கத்தில் லட்சுமி, ஹேமா இருவரும் பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கின்றனர்.

பாரதி கண்ணம்மா

அப்பாவுக்கும், மகளுக்கும் இடையே நடைபெறும் பாசப்போராட்டமான கதைக்களத்துடன் பயணித்து வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இப்போது வெண்பாவின் அம்மாவாக ஷர்மிளா என்ற புது கதாப்பாத்திரம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த சீரியலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என எதிர்பார்ப்பார்ப்புகள் எழுந்திருக்கிறது. அந்த வகையில் இன்றைய ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வீட்டுக்கு சென்ற ஷர்மிளாவை, ஏன் பாரதியிடம் கல்யாணம் பற்றி எல்லாம் பேசினீர்கள் என்று கோபப்படுகிறார் வெண்பா.

அப்போது பாரதி உன்மேல் கோபமாக இருக்கிறான். கல்யாண பேச்சு எடுத்தால் கோபப்படுகிறான். இப்போ சொல்லு பாரதி உன்னை காதலிக்கிறானா இல்லையா என்று கேட்க வெண்பாவும், சாந்தியும் திருதிருவென முழிக்கிறார்கள். தொடர்ந்து பாரதி இந்த ஜென்மத்தில் உன்னை கல்யாணம் பண்ண மாட்டான். அவன் மனசுல உனக்கு ஒரு சின்ன இடம் கூட இல்ல. நீயும் அவனுக்காக காத்திருக்க வேண்டாம். உனக்கு கொடுத்த ஒரு வருஷம் முடிந்து விட்டது. நானே உனக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க போகிறேன்.

நடிகை ஷபானா நடிக்கும் புதிய சீரியல் ‘செல்லமா’ ப்ரோமோ ரிலீஸ் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

இதில் எந்த மாற்றமும் இல்லை. ஒழுங்கா நான் சொல்வதை கேட்டு உன் வாழ்க்கையை பார். பாரதி பின்னால் சுற்றி விட்டு உன் வாழ்க்கையை வீணாக்காதே என்று பேசி விட்டு செல்கிறார். மறுபக்கத்தில் ஷர்மிளா பேசியதை பற்றி யோசித்து கொண்டிருக்கும் பாரதி இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்து கொண்டு வெண்பாவை மீட் செய்ய வேண்டும் என்று மெஸேஜ் செய்கிறார். தொடர்ந்து கண்ணம்மா வீட்டில் வைத்து, லட்சுமி மற்றும் ஹேமா இருவரும் ஸ்கூழுக்கு கிளம்பிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது கண்ணம்மா வந்து மார்க்கெட்டுக்கு போவதாக சொல்லி விட்டு கிளம்ப, நீ நேத்து எங்க அம்மா கிட்ட என்ன பேசிக்கொண்டிருந்தாய் ஹேமா. உங்க அப்பாவுக்கும் என் அம்மாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று அம்மாவிடம் கேட்டாயா. எனக்கு சம்மதம் தான். ஆனால் என் அம்மா என்ன பதில் சொன்னாங்க என லட்சுமி கேட்கிறார். அப்போது, சமையல் அம்மா எதுவும் பதில் சொல்லவில்லை என கூறுகிறார் ஹேமா. தொடர்ந்து நீ பாரதி அப்பாவிடம் பேசு, நான் எங்க அம்மாவிடம் பேசுகிறேன். இந்த கல்யாணத்தை நாம் நடத்துவோம் என்று லட்சுமி கூற இருவரும் சபதம் எடுக்கின்றனர்.

பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்தடுத்து என்ட்ரி கொடுக்கும் புது முகங்கள் – சீரியலில் புதிய திருப்பங்கள்!

அடுத்ததாக, வெண்பாவை சந்திக்கும் பாரதி நான் உன்னை காதலிக்கிறேன் என்று கூறி இருக்கிறேனா. இல்லை உன்னை அப்படி ஃபீல் பண்ண வைத்திருக்கிறேனா. அப்படி நினைத்து இருந்தால் அதை மறந்து விடு என கோபப்படுகிறார். அப்போது, என் அம்மா கேட்கும் போது நீ ஏன் அமைதியாக இருந்தாய். வெண்பா தான் என் வருங்கால மனைவி என்று சொல்லி இருக்கலாமே என வெண்பா கேட்க அவரை அடிக்க கை ஓங்குகிறார் பாரதி. தொடர்ந்து எனக்கு கஷ்டமான காலத்தில் ஒரு நல்ல தோழி என்று நினைத்து தான் உன்னிடம் பேசினேன். ஆனால் நீ இதை காதல் என்று எடுத்துக்கொண்டால் எப்படி என கேட்பதுடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!