நடிகை ஷபானா நடிக்கும் புதிய சீரியல் ‘செல்லமா’ ப்ரோமோ ரிலீஸ் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

0
நடிகை ஷபானா நடிக்கும் புதிய சீரியல் 'செல்லமா' ப்ரோமோ
நடிகை ஷபானா நடிக்கும் புதிய சீரியல் 'செல்லமா' ப்ரோமோ

நடிகை ஷபானா நடிக்கும் புதிய சீரியல் ‘செல்லமா’ ப்ரோமோ ரிலீஸ் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் முக்கிய கதாபாத்திரங்கள் பலர் விலகிய சமயத்திலும் இன்று வரை ஹீரோயினாக நடித்து இந்த சீரியல் மூலமாக பிரபலமாகிய ஷபானா தற்போது திடீரென சீரியலை விட்டு விலகி மற்றொரு சேனலுக்கு தாவியுள்ளதாக தற்போது வெளியாகிய ப்ரோமோ ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது.

செம்பருத்தி நடிகை ஷபானா:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் செம்பருத்தி. அதில் ஹீரோ கார்த்திக் ராஜ் ஆதித்யா கதாபாத்திரத்திலும், ஹீரோயினாக அறிமுகமாகிய நடிகை ஷபானா பார்வதி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வந்தனர். இருவரது திருமண எபிசோடு மிகுந்த ஹைப் கொடுத்து அதில் உள்ள காதல் கட்சிகளால் ரசிகர்கள் மனதை இருவருமே அதிக அளவில் கொள்ளைகொண்டனர். ஷபானா அவரது பொன் சிரிப்பிலும், எதார்த்த நடிப்பிலும் ரசிகர்களை ஈர்த்தவர்.

இவ்வாறு செம்பருத்தி சீரியலை அழகான ஜோடிகளுக்காக பார்க்கப்பட்டு வந்த நிலையில் திடீரென ஆதித்யா ரோலில் நடித்து ரசிகர் பட்டாளத்தை கொண்ட கார்த்திக் ராஜ் சீரியலை விட்டு விலகினார். அவருக்கு பதிலாக தொகுப்பாளர் அக்னி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். ஆரம்பத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய அவர் தவறினாலும், போகப் போக தனது நடிப்பு திறனை மெருகேற்றி பிரபலமானார். ஆனாலும் கார்த்திக் சீரியலை விட்டு விலகிய பிறகு கடந்த சில மாதங்களாகவே தொடரின் கதை போறீங்காக தான் நகர்ந்து வருகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 12ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இதற்கிடையில் ஷபானாவுக்கும், விஜய் டிவி பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியாவுக்கு முதல் மகனாக நடித்து வந்த செழியன் கதாபாத்திர நடிகர் ஆர்யன் அவர்களுக்கும் காதல் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகும் அதே செம்பருத்தி சீரியலில் நடித்து வந்தவர் திடீரென தற்போது சேனல் விட்டு சேனல் தாவி விஜய் டிவி யில் செல்ல பிள்ளை என்ற பெயர் கொண்டு வரவிருக்கும் ஒரு புது தொடரில் கதாநாயகியாக நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அதை குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் ஏதும் இன்னும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here