
பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2025 – University Research Fellow பணியிடங்கள் | மாதம் ரூ.5,000 ஊதியம்
பாரதிதாசன் பல்கலைக்கழகம் (Bharathidasan University) பல்கலைக்கழக ஆராய்ச்சி உதவியாளர் (University Research Fellow) பதவிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 04 காலியிடங்களுக்கு தகுதியான ஆராய்ச்சியாளர்கள் ஆஃப்லைன் வழியில் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி 10-11-2025 ஆகும். விண்ணப்பிக்கும்முன் தகுதி, வயது வரம்பு, சம்பளம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் நடைமுறை போன்ற அனைத்து விவரங்களையும் கீழே பார்க்கலாம்.
பணியிட விவரம்
| பதவி பெயர் | பணியிடங்கள் |
|---|---|
| University Research Fellow (URF) | 04 |
கல்வித்தகுதி
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் (Bharathidasan University) பல்கலைக்கழக விதிகளின்படி Ph.D. பதிவு பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு
குறிப்பிடப்படவில்லை.
சம்பளம்
மாதம் ரூ. 5,000/-
விண்ணப்பக் கட்டணம்
-
OC/BC/MBC விண்ணப்பதாரர்கள்: ரூ.300/-
-
SC/ST விண்ணப்பதாரர்கள்: ரூ.100/-
தேர்வு முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை கீழ்க்கண்ட முகவரிக்கு 10.11.2025 மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்:
Dr. S. Rajakumar,
Associate Professor and Head,
Department of Marine Biotechnology,
Bharathidasan University,
Tiruchirappalli – 620 024
Email: mbt@bdu.ac.in

























