முடிவை நோக்கி பயணிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் – விரைவில் சீசன் 2 அறிமுகம்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

0
முடிவை நோக்கி பயணிக்கும் 'பாரதி கண்ணம்மா' சீரியல் - விரைவில் சீசன் 2 அறிமுகம்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
முடிவை நோக்கி பயணிக்கும் 'பாரதி கண்ணம்மா' சீரியல் - விரைவில் சீசன் 2 அறிமுகம்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
முடிவை நோக்கி பயணிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் – விரைவில் சீசன் 2 அறிமுகம்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

பாரதியும் கண்ணம்மாவும் ஒன்று சேருவார்களா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் பாரதி கண்ணம்மா தொடர் விரைவில் முடிவடைய போவதாகவும், கூடிய விரைவில் சீசன் 2 அறிமுகமாக போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா சீசன் 2:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாரதியும், கண்ணம்மாவும் எப்போது தான் ஒன்று சேருவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். பாரதி, கண்ணம்மாவை விட்டு எவ்வளவு தான் விலக நினைத்தாலும் பாரதியும் கண்ணம்மாவும் சந்திக்கும்படியான சூழ்நிலை தான் அதிகமாக அமைந்து வருகிறது.

சன் டிவி ‘நாதஸ்வரம்’ சீரியல் பிரபல நடிகை கூறிய ஷாக் தகவல் – ரசிகர்கள் அதிர்ச்சி!

இதுமட்டுமல்லாமல் லட்சுமியும் தற்போது தான் தன்னுடைய அப்பா யார் என்பதை அறிந்திருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக அப்பாவை விட்டு பிரிந்துவிட்டோம். இதற்கு மேல் ஒரு நாள் கூட அப்பாவை விட்டு பிரிய கூடாது என நினைத்து பாரதியை அடிக்கடி லட்சுமி சந்தித்து கொண்டிருக்கிறார். இது ஒரு புறம் இருக்க மறுபுறம் பாரதியை கண்ணம்மாவிற்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என ஹேமா நினைத்து கொண்டிருக்கிறார். பாரதியும் அவரையே அறியாமல் லட்சுமியை தன்னுடைய பெண்ணாகவே உணர ஆரம்பித்துவிட்டார்.

கோலாகலமாக நடந்த ஆல்யா, சஞ்சீவ் ஐலா பாப்பாவின் 2வது பிறந்தநாள் விழா – வைரலாகும் வீடியோ!

எப்போது தான் பாரதி DNA டெஸ்ட் எடுத்து அனைத்து உண்மைகளையும் தெரிந்துகொள்ள போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் வேளையில் பாரதி கண்ணம்மா தொடர் விரைவில் முடிவடைய போவதாகவும், சீசன் 2 ஆரம்பிக்க போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாரதி கண்ணம்மா சீசன் 2 ல் பழைய கண்ணம்மாவாக நடித்த ரோஷினியும், தற்போது கண்ணம்மாவாக நடித்து கொண்டிருக்கும் வினுஷா தேவியும் இணைந்து நடிக்க போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எந்த மாதிரியான கதைக்களம் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!