கோலாகலமாக நடந்த ஆல்யா, சஞ்சீவ் ஐலா பாப்பாவின் 2வது பிறந்தநாள் விழா – வைரலாகும் வீடியோ!

0
கோலாகலமாக நடந்த ஆல்யா, சஞ்சீவ் ஐலா பாப்பாவின் 2வது பிறந்தநாள் விழா - வைரலாகும் வீடியோ!
கோலாகலமாக நடந்த ஆல்யா, சஞ்சீவ் ஐலா பாப்பாவின் 2வது பிறந்தநாள் விழா - வைரலாகும் வீடியோ!
கோலாகலமாக நடந்த ஆல்யா, சஞ்சீவ் ஐலா பாப்பாவின் 2வது பிறந்தநாள் விழா – வைரலாகும் வீடியோ!

தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகர் நடிகையான சஞ்சீவ் ஆலியாவிற்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் அவர்களது மூத்த மகள் ஐலாவின் இரண்டாவது பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த வீடியோ வெளியாகி இருக்கிறது.

பிறந்தநாள் கொண்டாட்டம்:

விஜய் டிவியில் வெற்றி சீரியல் ஒன்றில் ஒன்றாக நடித்து பின் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் ஆலியா சஞ்சீவ் ஜோடி. இருவரும் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட நிலையில் இரண்டு வயதில் அவர்களுக்கு ஐலா என்ற மகள் இருக்கிறாள். அவளும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் குழந்தையாக இருக்கும் நிலையில் ஆலியா ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆலியா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தார்.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் வரப்போகும் திடீர் திருப்பம் – சிறைக்கும் செல்லும் பாக்கியா!

அவர்களுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு அர்ஷ் என பெயர் வைத்துள்ளனர். தன்னுடைய மகனை முதன்முதலில் கையில் வாங்கிய புகைப்படத்தை சஞ்சீவ் வெளியிட்டு இருந்தார். சமூக வலைத்தளங்களில் அன்றைய தினம் அதிகம் பேசப்பட்ட கன்டென்ட் இதுவாக தான் இருக்கிறது. இந்நிலையில் ஆலியாவின் 9வது மாத வளைகாப்பு நிகழ்ச்சியை கோலாகலமாக கொண்டாடினார்கள். அன்றைய தினம் அவர்களின் மூத்த மகள் ஐலாவின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் முடிய போகிறதா? விரைவில் தொடங்கும் சீசன் 2! ப்ரோமோ ரிலீஸ்!

ஐலாவும் பிறந்த அன்று முதல் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக இருக்கிறாள். அந்த வகையில் ஐலாவின் இரண்டாவது பிறந்தநாள் கோலாகலமாக நடைபெற்று அது குறித்த வீடியோ ஒன்றை சஞ்சீவ் ஆலியா அவர்களது யூடுப் சேனலில் வெளியிட்டு இருக்கின்றனர். அதில் ஐலா பாப்பாவின் அழகான சேட்டைகளை பார்க்க பலர் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!