BEL நிறுவனத்தில் ரூ.20,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!
BEL நிறுவனம் ஆனது Management Industrial Trainee பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
BEL காலிப்பணியிடங்கள்:
Management Industrial Trainee பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Management Industrial Trainee கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் CMA/ CA தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு தகுதியானவர்கள்.
BEL வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் ரூ.15 லட்சம் சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
Management Industrial Trainee ஊதிய விவரம்:
1st Year – ரூ.18,000/-
2nd Year – ரூ.19,000/-
3rd Year – ரூ.20,000/-
BEL தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 30.09.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

























