‘வந்தே பாரத்’ ரயில் பாதையில் தடுப்புகள் அமைக்கும் பணி – மத்திய அமைச்சர் தகவல்!!

0
வந்தே பாரத்' ரயில் பாதையில் தடுப்புகள் அமைக்கும் பணி
வந்தே பாரத்' ரயில் பாதையில் தடுப்புகள் அமைக்கும் பணி
‘வந்தே பாரத்’ ரயில் பாதையில் தடுப்புகள் அமைக்கும் பணி – மத்திய அமைச்சர் தகவல்!!

‘வந்தே பாரத்’ ரயில் செல்லும் பாதையில் தடுப்புகள் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மாடுகள் மோதுவதால் ஏற்படும் சேதங்களை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரயில் சேவை

இந்தியாவில் இயக்கப்பட்டு வரும் ‘வந்தே பாரத்’ ரயில்கள் அதி வேகமாக செல்லக்கூடியவை. கடந்த 2019 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த அதிவேக விரைவு ரயில் சேவை மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய திறன் கொண்டது. இந்த ரயில்கள் டெல்லி, மும்பை, மைசூரு, சென்னை போன்ற முக்கியமான பெருநகரங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ‘வந்தே பாரத்’ ரயில்கள் செல்லும் பாதைகளில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகளை மத்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Chat GPT பிரபலமானால் Google நிறுவனத்தின் நிலை என்ன? போலியான தகவலை தருகிறதா? முழு விவரம் உள்ளே!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அதாவது, அதிவேகமாக செல்லும் ‘வந்தே பாரத்’ ரயில்கள் மீது, மாடுகள் மோதுவதால் சேதங்கள் ஏற்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் மூலம் பல்வேறு ரயில்களின் முன்பக்கம் கடுமையாக உடைந்து சேதமடைந்து வருகிறது. இந்த காரணத்தால், வந்தே பாரத் ரயில் செல்லும் பாதையில் தடுப்புகளை அமைக்க மத்திய ரயில்வே வாரியம் திட்டமிட்டது. இப்போது இதற்கான பணிகளை துவங்கியுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!