கண்ணம்மாவுடம் சேர்ந்து வாழ விரும்பும் பாரதி, தடுக்க நினைக்கும் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

0
கண்ணம்மாவுடம் சேர்ந்து வாழ விரும்பும் பாரதி, தடுக்க நினைக்கும் வெண்பா - இன்றைய
கண்ணம்மாவுடம் சேர்ந்து வாழ விரும்பும் பாரதி, தடுக்க நினைக்கும் வெண்பா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!!
கண்ணம்மாவுடம் சேர்ந்து வாழ விரும்பும் பாரதி, தடுக்க நினைக்கும் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா தப்பு செய்திருக்கமாட்டாள் என தனக்கு தோணுவதாக பாரதி வெண்பாவிடம் சொல்கிறார். பின் அஞ்சலி மாத்திரை போடுவதை தவிர்க்க பல்லி வந்து மேலே விழுகிறது.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி தனக்கு குற்ற உணர்ச்சியாக இருப்பதாகவும், கண்ணம்மா மீது தப்பே இல்லாமல் இருந்தால் என்ன என வெண்பாவிடம் புலம்புகிறார். அப்போது வெண்பா பயங்கர கோவத்தில் இருக்க, இப்படியே பாரதியை விட கூடாது, அவன் மனசில் இருந்து இந்த எண்ணத்தை இப்பவே எடுக்க வேண்டும் என நினைத்து, பாரதியிடம் கண்ணம்மா பற்றி பேசுகிறார். நீ சொல்வதெல்லாம் சரி தான் பொண்டாடி தப்பு பண்ணியும் நீ இப்படி பேசுகிறாய் என்றால் உனக்கு பெரிய மனசு தான் என சொல்கிறார்.

உன் அம்மா அப்பா அகில் அஞ்சலி, கண்ணம்மாவின் சித்தி பாக்கியா என அனைவரும் கண்ணம்மாவை நம்ப தான் செய்வாங்க ஏன் என்றால் இரவு 3 மணிக்கு ஒரு பையனுடன் கடற்கரையில் கண்ணம்மாவை பார்த்தது நீயும் நானும் தான, அப்பறம் அவன் வீட்டில் தங்கியதை பார்த்ததும் நீ தான என கேட்க, பாரதி நடந்ததை எல்லாம் நினைத்து பார்க்கிறார். உடனே பாரதிக்கு பயங்கரமாக குழப்பம் வருகிறது. நீயே நல்ல முடிவு எடுத்துக்கோ பாரதி என சொல்கிறார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சுஜிதா வெளியிட்ட ரகசியம் – சூரிய நமஸ்காரம் டூ இட்லி!

அகில் அஞ்சலி பரிகாரத்தை முடித்துவிட்டு அங்கிருந்து வர சௌந்தர்யா என்னாச்சு என கேட்கிறார். கோவிலுக்கு சென்றோம் என அஞ்சலி சொல்ல முட்டி போட்டு பரிகாரம் செய்தார் என சொல்லவும், எதற்கு இப்படியெல்லாம் கஷ்டப்படுகிறாய் என சௌந்தர்யா சொல்கிறார். எல்லாம் குழந்தைக்காக தான் என சொல்லி ரூமிற்கு செல்கிறார். பின் அஞ்சலியிடம் எல்லாம் நல்லபடியாக நடக்கும் மாத்திரை போடு நீ என சொல்லிவிட்டு குளிக்க போகிறார்.

அஞ்சலி மாத்திரையை எடுக்க வெண்பா கொடுத்த மாத்திரை இல்லையே பாரதி மாமா கொடுத்தது தான என சொல்லி மாத்திரையை கையில் எடுக்கிறார்.வெண்பா இரண்டு மாத்திரை போட சொன்னாலே என நினைத்து இரண்டு மாத்திரை போட சொல்கிறார். அப்போது ஒரு பல்லி வந்து மேலே விழுந்து அந்த மாத்திரையை தட்டி விடுகிறது. அஞ்சலி எதோ தவறாக இருப்பதை உணர்ந்து காலெண்டர் எடுத்து பார்க்கிறார். அதில் கேட்ட விஷயம் என இருக்கிறது.

அதன் பின் மாத்திரை போடுவது தவறா இல்லை போடாதது தவறா என தெரியவில்லையே என நினைத்து குழப்பத்தில் இருக்கிறார். அப்போது அகில் அஞ்சலி அமர்ந்து ஒரு பல்லிக்கு இப்படி பயப்படுறியே கண்ணம்மா அண்ணி எப்படி தைரியமாக இருக்கிறார் என சொல்கிறார். அப்போது அங்கே பாரதி வருகிறார் அகிலை அனுப்பி அம்மாவை அழைத்து வர சொல்கிறார். அகில் சென்று சௌந்தர்யா வேணுவை அழைத்து வருகிறார். அப்போது பாரதி உங்களிடம் பேச வேண்டும் என சொல்கிறார்.

பிக் பாஸ் டைட்டில் வின்னருடன் மேக்னா ராஜ் மறுமணம்? தீயாக பரவும் செய்தி!

நான் என் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் நினைத்து பார்க்கிறேன். கண்ணம்மா தப்பு செய்திருந்தாலும் என் மேலே தான் தப்பு இருக்குமா என நினைப்பு எனக்கு வருகிறது. ஒரு வேலை நான் தான் தப்பு செய்திருப்பேன் என நினைக்க தோணுது, இந்த பக்கமும் அந்த பக்கமும் ஒரே குழப்பமாக இருக்கிறது. இதை நினைத்து நினைத்து அழுத்தமாக இருக்கிறது. இனிமேல் இருக்க உள்ள வாழ்க்கையை சேர்ந்து வாழ வேண்டும் என நினைத்து என் மனது அடித்துக் கொள்கிறது என சொல்லி அழுகிறார். உடனே சௌந்தர்யா சந்தோஷத்தில் பாரதிக்கு ஆறுதல் சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!