‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சுஜிதா வெளியிட்ட ரகசியம் – சூரிய நமஸ்காரம் டூ இட்லி!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை சுஜிதா வெளியிட்ட ரகசியம் - சூரிய நமஸ்காரம் டூ இட்லி!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை சுஜிதா வெளியிட்ட ரகசியம் - சூரிய நமஸ்காரம் டூ இட்லி!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சுஜிதா வெளியிட்ட ரகசியம் – சூரிய நமஸ்காரம் டூ இட்லி!

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சுஜிதா அவரது யூடிப் சேனலில் சமீபத்தில் தன்னுடைய எடை குறைப்புக்கான ரகசியங்களை பகிர்ந்துள்ளார்.

நடிகை சுஜித்ரா:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 500 எபிசோடுகளை தாண்டி ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வருகிறது. கூட்டு குடும்பத்தில் ஒற்றுமையுடன் இருக்கும் நான்கு சகோதரர்கள் என சீரியல் ஒரு குடும்ப கதை காலத்தை கொண்டுள்ளது இந்த சீரியலில் வீட்டின் மூத்த மருமகளா நடிக்கும் சுஜித்ரா தன் கதாபத்திரத்தால் பிரபலமாகியுள்ளார். சீரியலில் வீட்டின் மூத்த மருமகளா இருந்து தன்னுடைய கொழுந்தன்களை தன் பிள்ளைகள் போல வளர்கிறாள்.

பிக் பாஸ் டைட்டில் வின்னருடன் மேக்னா ராஜ் மறுமணம்? தீயாக பரவும் செய்தி!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் அனைவரும் பிடித்த கேரக்டாராக உள்ளது. இவர் ‘கதைகேளு கதைகேளு’ எனும் பெயரில் தனக்கென தனிப்பட்ட யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் குழந்தைகளுக்கான கதைகள் சொல்லும் வீடியோக்களை மட்டும் பதிவிட்டு வந்தார். அதன் பிறகு அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள் என்று பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்த சேனலில் சுஜிதா தனது உடல் எடை குறித்த ரகசியங்களை பகிந்துள்ளார். அவர் கூறியதாவது, காலை எழுந்ததும் ஓர் க்ளாஸ் சுடு தண்ணீரில், எலுமிச்சை, ஆப்பிள் சைடர் மற்றும் தேன் கலந்து குடிப்பேன்.

உடல்நிலை மோசமான சீரியல் நடிகர் வேணு அரவிந்த் – தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

பிறகு 40 நிமிட நடைபயிற்சி நேரம் இருந்தால் மட்டுமே செய்வேன். சூரிய நமஸ்காரம் நிச்சயம் செய்வேன். ஷூட்டிங் சென்றால் தாகம் எடுக்கும் போது அடிக்கடி சூடு தண்ணீர் குடிப்பேன். மதிய வேளையில் உணவில் நிறைய காய்கறிகளை சேர்த்துக் கொள்வேன். 6.30 மணி போல இரண்டு இட்லி, சப்பாத்தி சாப்பிடுவேன். அவ்வளவு தான் அதன் பிறகு எதுவும் சாப்பிடவே மாட்டேன். எப்போதாவது ரொம்ப சாப்பிடணும் போல தோன்றினால் ஒரு க்ளாஸ் பால் குடிப்பேன் என்று வீடியோவில் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!