பிக் பாஸ் டைட்டில் வின்னருடன் மேக்னா ராஜ் மறுமணம்? தீயாக பரவும் செய்தி!

0
பிக் பாஸ் டைட்டில் வின்னருடன் மேக்னா ராஜ் மறுமணம்? தீயாக பரவும் செய்தி!
பிக் பாஸ் டைட்டில் வின்னருடன் மேக்னா ராஜ் மறுமணம்? தீயாக பரவும் செய்தி!
பிக் பாஸ் டைட்டில் வின்னருடன் மேக்னா ராஜ் மறுமணம்? தீயாக பரவும் செய்தி!

கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மற்றும் நடிகை மேக்னா ராஜ் இருவரும் காதலித்து திருமணம் செய்த நிலையில், சிரஞ்சீவி கடந்த ஆண்டு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் நடிகை மேக்னா ராஜ் மற்றொருவரை மறுமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.

நடிகை மேக்னா ராஜ்:

நடிகை மேக்னா ராஜ் தமிழில் காதலில் விழுந்தேன் படத்தில் கனா காணும் காலங்கள் புகழ் ஜோக்கு ஜோடியாக நடித்தார். இது தவிர தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் அவ்வளவாக மேக்னா பிரபலமடையவில்லை. ஆனால் இவர் கன்னட திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்றார். நடிகர் அர்ஜுனின் குடும்பத்தில் உள்ள நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவும் நடிகை மேக்னா ராஜூம் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர். பின்னர், இரு வீட்டினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் கழித்து மேக்னா கர்ப்பமாக இருப்பதை அறிந்து குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.

சமந்தா, நாகசைதன்யா விவாகரத்து விவகாரம் – மாமனார் பதிவிற்கு வாழ்த்து! ரசிகர்கள் ஷாக்!

ஆனால் திடீரென்று எதிர்பாராத விதமாக நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். யாருமே எதிர்பார்க்காத இந்த உயிரிழப்பு குடும்பத்தினர் மட்டுமல்லாமல் ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. இதனால் நடிகை மேக்னா ராஜ் மிகவும் மனமுடைந்து இருந்தார். சில மாதங்களுக்கு முன்னதாக ஆண் குழந்தையை பெற்றார். அவரை அனைவரும் ஜூனியர் சி என்று ஆசையாக அழைத்தனர். சமீபத்தில் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடைபெற்றது. ஜூனியர் சிரஞ்சீவிக்கு ராயன் ராஜ் சர்ஜா எனப் பெயரிட்டனர்.

சன் டிவி சீரியல் நடிகைக்கு அரசு மருத்துவமனையில் பிரசவம் – ரசிகர்கள் வாழ்த்து!

இந்நிலையில், மேக்னா பிக் பாஸ் 4 கன்னட டைட்டில் வின்னர் பிரதாமை இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகிறது. இதற்கு நடிகர் பிரதாம் தனது டிவீட்டர் கணக்கில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் இதை புறக்கணிக்க நினைத்தேன்!! ஆனால் இந்த செய்தி 2.70 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. யூடியூப் சேனல்கள் வருமானத்திற்காக இது போன்ற அநாகரீகமான செயல்களில் ஈடுபடுகின்றன. இதற்கு சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க உள்ளேன். இது போன்ற வீடியோக்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் போது மற்ற சேனல்களுக்கு அது ஒரு பாடமாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!