‘பாரதி கண்ணம்மா’ அகிலனுடன் மீண்டும் இணைந்த அஞ்சலி – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!

0
'பாரதி கண்ணம்மா' அகிலனுடன் மீண்டும் இணைந்த அஞ்சலி - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!
'பாரதி கண்ணம்மா' அகிலனுடன் மீண்டும் இணைந்த அஞ்சலி - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!
‘பாரதி கண்ணம்மா’ அகிலனுடன் மீண்டும் இணைந்த அஞ்சலி – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த நடிகை கண்மணி தற்போது அவருடன் முன்பு அகிலன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அகிலனுடன் ஆல்பம் சாங் ஒன்றில் நடித்துள்ளார். அதனை பற்றிய பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலி

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது, பாரதி கண்ணம்மா சீரியல். தெலுங்கு சீரியலான ‘கார்த்திகை தீபம்’ சீரியலின் தமிழ் ரீமேக் தான் இந்த சீரியல். தற்போது இந்த சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒரே வீட்டில் கோர்ட் உத்தரவின் காரணமாக வசித்து வருகின்றனர். சீரியலின் டிஆர்பி ரேட்டிங்கை எகிற வைக்க ஒரு சில காதல் காட்சிகளும் வைக்கப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் முக்கியமான கதாபத்திரத்தில் நடிகை கண்மணி நடித்து வருகிறார். கண்ணம்மாவின் சகோதரி அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை கண்மணி ஆரம்பத்தில் வில்லி போலவே காட்டப்பட்டு வந்தார்.

விறுவிறுப்பான காட்சிகளுடன் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் சீசன் 2 – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

பின்னர், மனம் திருந்திய அவர் கண்ணம்மா மற்றும் குடும்பத்தினர் அனைவர் மேலும் அன்புடன் நடந்து வருகிறார். அவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பல சோதனைகளுக்கு மத்தியில் பிறந்தது. இப்படி இந்த சீரியலில் தனது தேர்ந்த நடிப்பினை நடிகை கண்மணி வெளிப்படுத்தி வருகிறார். முன்பு ஒரு சில குறும்படங்கள் மற்றும் ஆல்பம் பாடல்களில் நடித்து இருந்தாலும் அவருக்கு பெரும் புகழை தேடி தந்தது, பாரதி கண்ணம்மா சீரியல் தான். பாரதி கண்ணம்மா சீரியலில் அகிலன் மற்றும் அஞ்சலி ஜோடிக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருந்தது என்று தான் கூற வேண்டும். நடிகர் அகிலனுக்கு திரைப்பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்ததால் அவர் சீரியலில் விட்டு தற்போது விலகி விட்டார்.

Vijay TV Bigg Boss 5 Promo | பஸ் டாஸ்கில் வாந்தி எடுக்கும் போட்டியாளர்கள் – ரசிகர்கள் அதிர்ச்சி!

இது ஒரு புறம் இருக்க, நடிகை கண்மணி மற்றும் நடிகர் அகிலன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். இருவரும் இணைந்து ஒரு மியூசிக் ஆல்பம் போன்று செய்துள்ளனர். ‘ஹோரா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மியூசிக் ஆல்பம் வரும் டிசம்பர் 17ம் தேதி இரவு 7 மணிக்கு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பினை நடிகை அஞ்சலி மற்றும் நடிகர் அகிலன் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இதனால் இருவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here