பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் தேர்வில்லாமல் பணிவாய்ப்பு !
பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள தலைமை மருத்துவ ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இந்த வங்கி பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | பாங்க் ஆஃப் பரோடா வங்கி |
பணியின் பெயர் | தலைமை மருத்துவ ஆலோசகர் |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 31.03.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பாங்க் ஆஃப் பரோடா வங்கி காலிப்பணியிடங்கள்:
இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆப் பரோடா, ஒப்பந்த அடிப்படையில் மும்பையில் தலைமை மருத்துவ ஆலோசகராக வங்கியில் ஈடுபடுவதற்கு தகுதியான மற்றும் அனுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளது.
வயது வரம்பு:
01.03.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 67 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்விதகுதி:
Doctor of Medicine முடித்தவர்கள் மேற்கண்ட வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் குறுகிய பட்டியல் மற்றும் தனிப்பட்ட நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து [email protected]. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 31 மார்ச் 2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.