அம்ரிதா வீட்டிற்கு செல்லும் எழில், சமையல் ஆர்டரில் பிசியான பாக்கியா – இன்றைய எபிசோட்!

0
அம்ரிதா வீட்டிற்கு செல்லும் எழில், சமையல் ஆர்டரில் பிசியான பாக்கியா - இன்றைய எபிசோட்!
அம்ரிதா வீட்டிற்கு செல்லும் எழில், சமையல் ஆர்டரில் பிசியான பாக்கியா - இன்றைய எபிசோட்!
அம்ரிதா வீட்டிற்கு செல்லும் எழில், சமையல் ஆர்டரில் பிசியான பாக்கியா – இன்றைய எபிசோட்!

விஜய் தொலைக்காட்சியில் இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் எழில் அம்ரிதாவின் வீட்டிற்கு செல்கிறார். அங்கு அவரது அம்மா மற்றும் அப்பாவிடம் ஆறுதலாக பேசுகிறார். பின், பாக்கியா தான் எடுத்திருக்கும் சமையல் ஆர்டருக்கான குஜராத்தி வகை உணவுகளை பற்றி குடும்பத்தினருடன் பேசுகின்றனர்.

“பாக்கியலட்சுமி” சீரியல்:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியா நன்றாக சமைத்து தருவார் என்று குடும்பத்தினர் ஆதரவாக பேசுகின்றனர். பாக்கியா தனக்கு குஜராத்தி உணவு வகைகளை நன்றாக சமைக்க தெரியும் என்று கூறுகிறார். இதனால் கோபியின் நண்பர் திருப்தி அடைந்து ஆர்டர் கொடுத்து விட்டு செல்லுகிறார். இதனால் பாக்கியா குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைகின்றனர். பின், எழில் அம்ரிதாவின் வீட்டிற்கு அம்மா மற்றும் அப்பா இருவருக்கும் பிடித்த பழவகைகளை வாங்கி கொண்டு செல்கிறார்.

ஜூலை 31 வரை பள்ளி, கல்லூரிகள் மூடல் – புனே நிர்வாகம் அறிவிப்பு!

பின், அவர்களிடம் பேசுகிறார். முதலில் பேச மறுக்கும் அம்ரிதாவின் தந்தை பின் எழிலிடம் இயல்பாக பேசுகிறார். அப்போது அம்ரிதாவின் அம்மா தனது மகன் கணேசனை நினைத்து மிகவும் வருந்துகிறார். தங்கள் மேல் மிகவும் அன்பாக இருந்ததாகவும், வெகு ஆண்டுகள் கழித்து தங்களுக்கு பிறந்த பிள்ளை என்றும் தெரிவிக்கின்றனர். இதனை கேட்டு வருத்தம் அடையும் எழில் அவரை சமாதானம் செய்கிறார். பின், பாக்கியா வீட்டில் இனியாவின் படிப்பு மற்றும் எக்ஸாம் குறித்து பாக்கியா கேட்கிறார்.

புதிய சமையல் ஆர்டர் எடுத்திருப்பதால் இனியாவை நன்றாக படிக்குமாறு பாக்கியா கூறுகிறார். தான் நன்றாக படித்துக் கொள்வதாகவும், ஏதேனும் சந்தேகம் இருந்தால் தாத்தாவிடம் கேட்டுக் கொள்வதாகவும் கூறுகிறார். பின், எழில் தனது அம்மாவிடம் சமையல் ஆர்டர் குறித்து கேட்கிறார். குஜராத்தி உணவுகளை நன்றாக சமைக்க பாக்கியாவால் முடியுமா என்றும் வினவுகிறார்.

TN Job “FB  Group” Join Now

அப்போது பாக்கியாவிற்கு கோபியின் நண்பர் மனைவி போன் செய்து செய்ய வேண்டிய உணவு வகைகள் குறித்த விவரங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பி இருப்பதாக கூறுகிறார். பின் ஜெனி, எழில், இனியா மற்றும் பாக்கியா அவர் அனுப்பி இருக்கும் குஜராத்தி வகை உணவுகள் பற்றி பேசுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

“நாம் இருவர் நமக்கு இருவர்” வீடியோவை பார்க்க கிளிக் செய்யுங்க!!

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here