பெரிய சமையல் ஆர்டர் செய்ய முடிவு எடுக்கும் பாக்கியா, மறுப்பு தெரிவிக்கும் குடும்பத்தினர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

0
பெரிய சமையல் ஆர்டர் செய்ய முடிவு எடுக்கும் பாக்கியா, மறுப்பு தெரிவிக்கும் குடும்பத்தினர் - இன்றைய
பெரிய சமையல் ஆர்டர் செய்ய முடிவு எடுக்கும் பாக்கியா, மறுப்பு தெரிவிக்கும் குடும்பத்தினர் - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!!
பெரிய சமையல் ஆர்டர் செய்ய முடிவு எடுக்கும் பாக்கியா, மறுப்பு தெரிவிக்கும் குடும்பத்தினர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ஜெனி குழந்தையை கலைக்க வேண்டும் என செழியன் சொல்ல, பாக்கியா வந்து நிலைமையை புரிய வைக்கிறார். இன்னும் சில நாட்களில் சரியாகி விடும் என பாக்கியா சொல்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ஜெனி ஆபிஸ் செல்ல கஷ்டப்படுவதால் செழியன் இந்த குழந்தை வேண்டாம் என சொல்கிறார். உடனே அங்கே வந்த பாக்கியா, ஜெனியிடம் மாசமாக இருப்பதை சொல்லிவிடு என சொல்கிறார். அந்த ஆபிஸில் பெண்களும் வேலை செய்கிறார்கள் அவங்க எல்லாரும் குழந்தை பெற்றுக் கொள்ளமாட்டார்களா என பாக்கியா கேட்கிறார். சேர்ந்த உடனே குழந்தை என்று சொன்னால் ஒத்துக் கொள்ளமாட்டார்கள் என செழியன் சொல்ல, பாக்கியா இன்னும் சில வருடம் கழித்து எப்படி பெரிய இடத்திற்கு சென்ற பின்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என கேட்கிறார்.

அதனால் நீ எதையும் நினைக்காமல், நன்றாக புத்தகம் படி, பாடல் கேளு என சொல்கிறார். அதன் பின் அனைவரும் சாப்பிட அமர, பாக்கியா எதோ பேச வருகிறார். பின் கோபி சமையல் ஆர்டர் வேண்டாம் என சொல்லிட்டியா என கேட்க, நான் எடுக்க போறேன் என சொல்கிறார். என்ன நினைத்து கொண்டிருக்க அதெல்லாம் வீண் செலவு, உன்னால் எதுவும் முடியாது என சொல்ல, செழியன் பாக்கியாவிற்கு ஆதரவாக இருக்கிறார்.

அம்மாவின் அஸ்தியை கரைக்க கண்ணனை புறக்கணிக்கும் அண்ணன்கள் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

அவரையும் திட்டிவிட்டு, பாக்கியாவை கோபி, செழியன், பாட்டி சேர்ந்து மட்டம் தட்ட, இதெல்லாம் எதுவும் வேண்டாம் என சொல்கிறார். பின் பாக்கியா எழில் செல்வியிடம் பேச நினைக்க, என்னை இவ்வளவு கிண்டல் செய்கிறார்கள். அதனால் நான் கண்டிப்பாக செய்ய தான் போகிறேன். என்னை எப்படி மட்டம் தட்டி பேசினார்கள் அதனால் நான் கண்டிப்பா செய்வேன். நாளைக்கு நான் பக்கத்து வீட்டில் சென்று பேச போகிறேன். 12 டிஷ் தான ஆளுக்கு ஒன்று செய்தால் கூட முடித்துவிடலாம் என சொல்கிறார்.

உடனே எழில் 2 பேர் சேர்ந்து ஒரு டிஸ் செய்தால் சரியாக வரும் என சொல்கிறார். கண்டிப்பாக செய்திடலாம் என எழில் சொல்ல, பாக்கியா இதை நான் கண்டிப்பாக செய்ய தான் போகிறேன் எத்தனை வருஷம் தான் இவங்க திட்டுவதை நான் கேட்க போறேன் என பாக்கியா சொல்கிறார். நாளைக்கு வீட்டில் இருப்பவர்களிடம் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை என எழில் சொல்கிறார்.மறுநாள் பாக்கியா நடைப்பயிற்சி செய்ய பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் பாக்கியா பேசுகிறார்.

இரண்டாவது குழந்தைக்காக கோவிலில் பரிகாரம் செய்யும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

அப்போது அனைவரும் அங்கே வர, அப்போது பாக்கியா அந்த பெரிய ஆர்டர் பற்றி பேசுகிறார். எனக்கு ஒரு ஆர்டர் வந்திருக்கு, ரொம்ப பெருசு, 1000 பேருக்கு சமைக்க வேண்டும் என சொல்ல, பக்கத்து வீட்டில் இருப்பவர்கள், எப்படி செய்ய போகிறாய் என கேட்கிறார். இத்தனை நாள் செல்வி அம்மா ஜெனியை துணைக்கு வைத்துக் கொண்டு சமைப்பேன். ஆனால் இப்போது பெரிய ஆர்டர் ஆளும் என்னிடம் இல்லை.அதான் நீங்க எனக்கு உதவி செய்தால் நான் சமைத்துவிடுவேன் என சொல்கிறார் இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!