Today Stock Exchange: பங்கு சந்தையில் கடும் சரிவை சந்தித்த ஆக்ஸிஸ், ICICI..|| ” நஷ்டம் மட்டுமே இவ்வளவு கோடியா”..!!
இந்திய பங்குச் சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகள் தினசரி கணக்கிடப்பட்டு வருகிறது. மேலும், கடந்த சில வாரங்களாக மும்பை பங்குச் சந்தையின் குறியீடானது அதிகரித்து கொண்டே வந்த நிலையில், தற்போது 1,020 புள்ளிகளுக்கு மேல் சரிவை சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கடந்த மாதத்தில் AXIS மற்றும் ICICI வங்கிகளின் பங்கு விலையானது 6.6% மற்றும் 13.5% அதிகரித்த நிலையில், வரும் நாட்களில் பங்கு விலை இன்னும் உயரும் என்று ஆய்வாளர்கள் கணக்கிட்டு அறிவித்திருந்தனர். அந்த வகையில், இன்றைய பங்கு சந்தையில் RELIANCE, AXIS மற்றும் ICICI வங்கி உள்ளிட்ட வங்கி துறையின் பங்குகளானது கடும் சரிவடைந்து, முதலீட்டாளர்கள் ரூ. 8 கோடி வரை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


























