TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!
தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர் பணியிட போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.
TNUSRB PC தேர்வு:
தமிழக காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்களை கொண்டு நிரப்பப் பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் அதனால் விதிக்கப்பட்ட ஊரடங்கு போன்ற காரணங்களால் காவல் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்படவில்லை. இறுதியாக கடந்த 2019ம் ஆண்டு தேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு நடப்பாண்டு தேர்வு நடத்தப்பட உள்ளது. கடந்த ஜூன் மாதம் 444 காவலர் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இரண்டாம் நிலை காவலர் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது.
அதில் மாவட்ட, மாநகர, ஆயுதப்படை பிரிவுகளில் 2,180 காலியிடங்கள், தமிழ்நாடு சிறப்பு காவல்படை பிரிவில் காலியிடங்கள் 1091, சிறை காவலர் பிரிவில் 161 காலியிடங்கள் மற்றும் தீயணைப்பாளர் பிரிவில் 120 காலியிடங்கள் என மொத்தம் இரண்டாம் நிலை காவலர் பணியில் 3,552 காலிப்பணியிங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 15ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் நாளை (22. 07.2022) பொதுத் தமிழ் பாடத்திற்கான ஆன்லைன் மாதிரித்தேர்வை நடத்த உள்ளது. இத்தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
TNUSRB PC பொதுத்தமிழ் SET 06(80)
Mock Test “WhatsApp Group” Join Now