TNPSC Group 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – ஏப்ரல் 28 கடைசி தேதி! உடனே விண்ணப்பியுங்கள்!

0
TNPSC Group 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு - ஏப்ரல் 28 கடைசி தேதி! உடனே விண்ணப்பியுங்கள்!
TNPSC Group 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு - ஏப்ரல் 28 கடைசி தேதி! உடனே விண்ணப்பியுங்கள்!
TNPSC Group 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – ஏப்ரல் 28 கடைசி தேதி! உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழகத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வான (TNPSC குரூப்4) தேர்வின் ஆன்லைன் விண்ணப்பபதிவுகள் நடைபெற்று வருகிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 4:

தமிழகத்தில் அரசுத் துறை பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் குறித்து TNPSC தேர்வாணையம் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் குரூப்2, 2A தேர்வு அறிவிப்பு வெளியாகி அதற்கான விண்ணப்ப பதிவுகளும் முடிவடைந்துள்ளது. அடுத்ததாக அதிக எண்ணிக்கையானோர் எழுதக் கூடிய குரூப் 4 & VAO தேர்வு குறித்த அறிவிப்பை ஏராளமான தேர்வர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் மார்ச் மாத இறுதியில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வான குரூப் 4 தேர்வின் அறிவிப்பு மற்றும் பாடத்திட்டம் போன்ற அறிவிப்புகள் வெளியானது.

தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

அரசின் இளநிலை உதவியாளர் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர், தமிழ்நாடு நீதி அமைச்சு பணி, தமிழ்நாடு தலைமைச் செயலக பணி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலக பணி தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், தொழில்நுட்ப மதர் சார்நிலைப் பணி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சார் நிலைப் பணி ஆகிய பணியிடங்களுக்கு நடத்தப்படும் இந்த குரூப் 4 தேர்வின் கீழ் நடப்பாண்டு 7301 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் அவை தேர்வின் படி நிரப்பப்படும் என்று TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

PGCIL நிறுவனத்தில் ரூ.1,17,500 ஊதியத்தில் வேலை – தேர்வு மட்டுமே..!

தற்போது குரூப்4 & VAO தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நடைபெற்று வருகிறது. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnpsc.gov.in / www.tnpscexams ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் நிரந்தர பதிவு மூலம் பதிவு கட்டணமாக ரூ.150/- ஐ செலுத்தி, பதிவு செய்ய வேண்டும். மேலும் ஒரு முறைப் பதிவு கணக்கு மற்றும் கடவுச்சொல் மூலமாக மட்டுமே விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். குரூப் 4 தேர்வுக்கு ஏப்ரல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!