ரயில் பயணிகள் கவனத்திற்கு – தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

0
ரயில் பயணிகள் கவனத்திற்கு - தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!
ரயில் பயணிகள் கவனத்திற்கு - தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!
ரயில் பயணிகள் கவனத்திற்கு – தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

தமிழக ரயில் பயணிகளுக்கு முக்கிய தகவலை தெற்கு ரயில்வே வெளியிட்டு உள்ளது. அதன் அடிப்படையில் மதுரையில் இருந்து சென்னை எழும்பூர் வரை செல்லும் வைகை, பாண்டியன் உள்ளிட்ட விரைவு ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

முக்கிய அறிவிப்பு:

தமிழகத்தில் 2019ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் COVID-19 பரவத் தொடங்கியது. மேலும் இந்த கொரோனா தாக்கம் அதிகப்படியான பேரழிவை ஏற்படுத்தி வந்ததால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அனைத்து துறைகளும் முடக்கப்பட்டது. இந்த வகையில் பேருந்து சேவை, ரயில் சேவை கடந்த 2020 மார்ச் மாதம் முதல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். தற்போது தாக்கம் குறைந்து அனைத்து போக்குவரத்து சேவைகளும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இந்நிலையில் சிலம்பு, அந்தியோதயா விரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு, அவற்றின் கால அட்டவணையிலும், பாண்டியன், வைகை அதிவிரைவு செல்லும் ரயில்கள், செங்கோட்டை பொதிகை விரைவு ரயில் அட்டவணையிலும் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எரிசக்தி அமைச்சகத்தில் ரூ.2,16,600/- ஊதியத்தில் வேலை – இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

இது தொடர்பாக மதுரை கோட்ட நிர்வாகம் செய்தி குறிப்பு வெளியிட்டு உள்ளது. அந்த செய்தி குறிப்பில் மதுரை – சென்னை பாண்டியன் விரைவு ரயில் (12638) மதுரையில் இருந்து (ஏப்.14) முதல் இரவு 9.30 மணிக்குப் பதிலாக 9.35 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை ரயில்நிலையங்களில் இருந்து முறையே இரவு 9.55, 10.10 மணிக்குப் பதிலாக இரவு 10, 10.15 மணிக்குப் புறப்பட்டு அதிகாலை 5.05 மணிக்குப் பதிலாக 5.15 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். சென்னை – செங்கோட்டை பொதிகை விரைவு ரயில் (12661) ஏப்ரல் 14 முதல் திண்டுக்கல், விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புக்கோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ரயில் நிலையங்களில் இருந்து முறையே அதிகாலை 3.10, 5.15, 5.35, 5.42, 5.58 காலை 6.12, 6.35, 6.48, 7.05, 7.35 மணிக்குப் புறப்படுவதற்குப் பதிலாக அதிகாலை 3.05, 5.10, 5.30, 5.37, 5.53, காலை 6.07, 6.30, 6.43,7, 7.30 மணிக்குப் புறப்படும்.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – கல்வித்துறை முக்கிய உத்தரவு!

இந்த ரயில் வழக்கமான நேரமான காலை 8.15 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மதுரை – சென்னை வைகை விரைவு ரயில் (12636) Vaigai Superfast Express ஏப்ரல் 14 முதல் மதுரையில் இருந்து காலை 7.05 மணிக்குப் பதிலாக காலை 7.10 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் சோழவந்தான் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7.25 மணிக்குப் பதிலாக காலை 7.30 மணிக்குப் புறப்படும். மதுரை – பழனி சிறப்பு விரைவு ரயில் (06480) ஏப்.14 முதல் மதுரையில் இருந்து காலை 7.20 மணிக்குப் பதிலாக காலை 7.25 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் கூடல் நகர், சமயநல்லூர், சோழவந்தான் ரயில் நிலையங்களில் இருந்து முறையே காலை 7.30, 7.38, 7.48 மணிக்குப் பதிலாக காலை 7.35, 7.44, 7.52 மணிக்குப் புறப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here