தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – கல்வித்துறை முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் அடுத்த மாதம் 10 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இதனால் அனைத்து பள்ளிகளிலும் பாடத்திட்டங்களை முடிக்கும் பணியில் ஆசிரியர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகளும் முக்கிய உத்தரவு ஒன்றை பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது.
முக்கிய உத்தரவு:
தமிழகத்தில் கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் திறக்கப்பட்டன. இதனிடையே, ஜனவரி மாதத்தில் மீண்டும் கொரோனா, ஒமைக்ரான் பாதிப்பு தமிழகத்தில் அதிகரிக்கத் தொடங்கியதால், மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் பள்ளிகளை பொறுத்தவரை பல்வேறு தரப்பினர் இடத்தில் இருந்து வந்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, மாணவர்களின் நலன் கருதி 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வருகிற 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் பலனாக மாநிலம் முழுவதும் கொரோனா தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கியது.
TN Job “FB
Group” Join Now
இதனால் கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதல் 1 முதல் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கும், அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கின. மேலும், கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வும் நடைபெற்றது. இந்த தேர்வானது இறுதி ஆண்டு மாணவர்களை தவிர மற்ற மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. மேலும் இந்த ஆண்டு 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார்.
அதன் அடிப்படையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற மே 6 முதல் தொடங்கப்பட்டு மே 30 ஆம் தேதி முதல் முடிவடையும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு வருகிற மே 9 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு மே 31 ஆம் தேதி வரை முடிவடையும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வருகிற மே 5ஆம் தேதி முதல் தொடங்கப்படும் எனவும் இறுதி தேர்வு மே 28 ஆம் தேதி உடன் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி தினங்களை முன்னிட்டு நேற்று முதல் நாளை மறு நாள் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பல்வேறு தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக புகார் எழுந்ததாகவும், அதை விசாரித்த பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது. அந்த வகையில் விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் எடுக்க தடை என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.