
ATM கார்டில் காப்பீடாக 5 லட்சம் பெறும் வசதி இருக்கு…!! ” உங்களுக்கு தெரியுமா..”?? அது எப்படினு தெரிஞ்சுக்க இத படிங்க..!!
நேரடி விவாதத்திற்கு தயார்.. எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி..!!
அதாவது, ATM கார்டு உங்களுக்கு காப்பீடு தொகை வழங்குகிறது. இதற்கு நீங்கள், உங்கள் ATM கார்டை குறைந்த பட்சம் 45 நாட்கள் பயன்படுத்தி இருக்க வேண்டும். ATM கார்டின் தன்மைக்கேற்ப காப்பீடு தொகை மாறுபடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் ரூபே கார்டு பெற்றுள்ளீர்கள் என்றால், உங்களுக்கு ரூ. 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை காப்பீடு தொகை கிடைக்கும். கவரேஜ் ATM கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுவதோடு, விபத்து ஏற்பட்டு அதில் ஊனமுற்றால், ரூ. 50 ஆயிரம் வரை காப்பீடு தொகை வழங்கப்படுகிறது . மற்ற கிளாசிக் ATM கார்டுகளுக்கு ரூ. 1 லட்சம், பிளாட்டினம் கார்டுகளுக்கு ரூ. 2 லட்சம் மற்றும் மாஸ்டர் கார்டுகளுக்கு ரூ. 50 ஆயிரம் வரை காப்பீடு தொகை வழங்கப்படுகிறது . பிளாட்டினம் மாஸ்டர் கார்டுகளுக்கு ரூ. 5 லட்சம் மற்றும் விசா கார்டுகளுக்கு ரூ.1.5-2 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
ATM கார்டு வைத்திருப்பவர்கள் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விபத்து மூலம் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெறும் சான்றிதழ் மற்றும் FIR காப்பி முதலிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். கார்டுதாரர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், அவர்களின் நாமினி போதிய ஆவணங்களை சமர்ப்பித்து காப்பீட்டு தொகையை பெறலாம்.


























