விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம்..!! பின்னணியில் திமுகவா..? முழு விவரம் உள்ளே..!!
விசிகவின் துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா எழுதிய “எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்” நூல் வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜயின் பேச்சு ஒருபக்கம் அரசியல் களத்தில் ஹாட் டாபிக்காக மாற, மறுபக்கம் ஆதவ் அர்ஜுனா ஆற்றிய உரை அவரது கட்சிக்குள் பூகம்பமாக வெடித்தது. அதாவது, “இனி யாரும் பிறப்பால் முதல்வராக கூடாது” என அவர் கூறிய கருத்திற்கு திமுகவில் எதிர்ப்பு எழுந்ததோடு திமுக-விசிக கூட்டணியிலும் விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து பேசிய விசிக தலைவர் தொல். திருமாவளவன், கட்சி நிர்வாகிகளோடு கலந்து ஆலோசித்து ஆதவ் அர்ஜுனா குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறி இருந்த நிலையில், இன்று “கட்சியின் நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாக கூறி ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து 6 மாதம் இடை நீக்கம்” செய்யபடுவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு பின்னணியில் திமுக தான் செயல்படுவதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
























