அரசு பள்ளிகளில் உதவி ஆசிரியர்கள் நியமனம் – அமைச்சரவை ஒப்புதல்!

0
அரசு பள்ளிகளில் உதவி ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சரவை ஒப்புதல்!
அரசு பள்ளிகளில் உதவி ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சரவை ஒப்புதல்!
அரசு பள்ளிகளில் உதவி ஆசிரியர்கள் நியமனம் – அமைச்சரவை ஒப்புதல்!

அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர்கள் நீண்ட விடுப்பில் செல்லும் பட்சத்தில் இவர்களுக்கு மாற்று ஆசிரியர்கள் ஏற்பாடு செய்வதற்கு அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

அமைச்சரவை ஒப்புதல்:

உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் நீண்ட விடுப்பில் செல்லும் பட்சத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்கும் நோக்கத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவையில் பெறப்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர் பணியிடங்களில் அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இடையேயான உதவி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள் 15 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை மருத்துவம், மகப்பேறு அல்லது குழந்தை பராமரிப்பு போன்ற காரணங்களுக்காக நீண்ட விடுமுறைகளை எடுக்கின்றனர்.

அரசு ஊழியர்களுக்கு தற்போது ஊதிய உயர்வு இல்லை – மத்திய நிதித்துறை தகவல்!

இதன் காரணமாக மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் சூழல் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் மாநிலத்தில் ஹெலி பேடுகள் குத்தகைக்கு எடுக்கப்பட்டு இதற்கான வருடாந்திர வாடகை வழங்கப்படும் என்றும், 250 மக்கள் தொகை கொண்ட கிராமங்களை முக்கிய மோட்டார் சாலைகளுடன் இணைக்கும் முக்கிய மந்திரி கிராமிய சதக் யோஜனா திட்டத்திற்கும் அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Follow our Instagram for more Latest Updates

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!