IND vs ENG 4வது டெஸ்ட் – காயத்தால் ஜடேஜா விலகல்? அஷ்வினுக்கு வாய்ப்பு!

0
IND vs ENG 4வது டெஸ்ட் - காயத்தால் ஜடேஜா விலகல்? அஷ்வினுக்கு வாய்ப்பு!
IND vs ENG 4வது டெஸ்ட் - காயத்தால் ஜடேஜா விலகல்? அஷ்வினுக்கு வாய்ப்பு!
IND vs ENG 4வது டெஸ்ட் – காயத்தால் ஜடேஜா விலகல்? அஷ்வினுக்கு வாய்ப்பு!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் 4 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஜடேஜா காயம் காரணமாக போட்டியில் இருந்து விலக இருப்பதாகவும், அவருக்கு பதிலாக முன்னணி பந்து வீச்சாளர் அஷ்வின் களமிறங்குவார் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஜடேஜா விலகல்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் முதல் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து 2 ஆவது போட்டியில் இந்திய அணியும், 3 ஆவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் முடிவடைவதற்கு இன்னும் 2 ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் வெற்றுயை தக்கவைத்து கொள்ள இந்திய அணி முனைப்பு காட்டி வருகிறது.

தமிழில் பெயர் எழுதுவோருக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் வெளியீடு!

இந்நிலையில் கடந்த 3 ஆவது டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதன் அவர் காரணமாக மீதமுள்ள ஆட்டங்களில் இருந்து விலக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. அதாவது 3 ஆவது ஆட்டத்தின் போது பீல்ட்டிங் செய்து வந்த ஜடேஜாவின் வலது காலில் உள்ள மூட்டு பகுதி காயமாகி இருக்கிறது. இந்த காயம் சற்று அதிகமாக இருப்பதால், அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்படும் பட்சத்தில் ஜடேஜா மீதமுள்ள 2 போட்டிகளில் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மறுபக்கத்தில் ஜடேஜா காயம் காரணமாக போட்டியை விட்டு வெளியேறினால், அவருக்கு பதிலாக ரவிச்சந்திர அஷ்வின் சேர்க்கப்படுவார் என கூறப்படுகிறது. ஏற்கனவே நடைபெற்ற போட்டிகளில் 4 வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளருக்கு மட்டுமே வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட போது, இந்திய அணியில் அஷ்வின் இடம்பெறாதது குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தது. அதே நேரத்தில் ஜடேஜாவுக்கு பதிலாக அஷ்வின் அணியில் இணைந்தால் மற்றொரு பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மாவுக்கு ஓய்வு கிடைக்கலாம் என தெரிகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!