தமிழகத்தில் பால், தயிர் விலை அதிரடி உயர்வு… விலை உயர்வால் சாமானிய மக்கள் அதிர்ச்சி…!!
தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த பால் தேவையில் 84 % தனியார் நிறுவனங்களே நிரப்பப்படுகிறது. எனவே, இதனை பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் பால் மற்றும் தயிரின் விலையை அவ்வப்போது உயர்த்தி வருகின்றன. இந்நிலையில், தற்போது ஹட்சன் நிறுவனமானது, ஆரோக்கியா பால் மற்றும் தயிரின் விலையை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசின் இலவச வீடு கட்டுதல் திட்டம்…உடனே எப்படி அப்ளை பண்றதுன்னு தெரிஞ்சுக்கோங்க..
அதாவது, ஆரோக்யா பாலின் விலை லிட்டருக்கு 4 ரூபாயும், தயிர் கிலோவிற்கு 3 ரூபாயும் உயர்த்தியுள்ளதாக வெளியான அறிவிப்பால் அதன் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதையடுத்து, இனிமேல் நிறைகொழுப்பு பாலின் விலை லிட்டருக்கு ரூ. 82 க்கும், அரை லிட்டர் ரூ. 40 க்கும் விற்பனை செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது. மேலும், 2025 ஆம் ஆண்டில் மட்டும், பால் மற்றும் தயிரின் விலை உயர்வு இது இரண்டாவது முறை ஆகும்.


























