ஆன்லைன் தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் – அண்ணா பல்கலை வெளியீடு!!
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இணைய வழி ஆன்லைன் வகுப்புகளுக்கு மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் வெளியிட்டுள்ளார்.
தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்:
அண்ணா பல்கலைக்கழகம் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு மனவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் மற்ற ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் இந்த ஆண்டு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வுகள் நடத்தவேண்டும் என யுஜிசி உத்தரவிட்டிருந்தது.
9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை!!
இதன்படி ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டது. தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதனபடி மாணவர்கள் கட்டாயமாக 1 மணி நேரம் நடத்தப்படும் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். ஏதேனும் தொழிநுட்ப காரணங்கள் காரணமாக தேர்வில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு நேரடி தேர்வுகள் நடத்தப்படும்.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆங்கில பயிற்சி – முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை!!
60 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும். மாணவர்கள் மடிக்கணினி, செல்போன், கையடக்க கணினி போன்றவற்றை பயன்படுத்தி தேர்வில் கலந்துகொள்ளலாம். 60 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடத்தப்பட்டு 100 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடத்தப்படும். தேர்வு நடத்தப்படும் போது அந்த அறையில் குடும்ப உறுப்பினர்கள் யாரும் இருக்க கூடாது. தேர்வு எழுதும் போது மாணவர்கள் கேமராவை விட்டு வெளியே வர கூடாது. இவ்வாறு பல வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
For Online Test Series
கிளிக் செய்யவும்
To Join Whatsapp
கிளிக் செய்யவும்
To Join Facebook
கிளிக் செய்யவும்
To Join Telegram Channel
கிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channel
கிளிக் செய்யவும்
For Pondicherry University arrear exam’s are also conducted online and I cleared it