கொரோனா தொற்று இயற்கையாக உருவானது அல்ல.. அமெரிக்க புலனாய்வு அமைப்பு அறிவித்த திடீர் தகவல்..
கொரோனா வைரஸ் (COVID-19) என்பது SARS-CoV-2 வைரஸால் ஏற்பட்ட சுவாச தொற்று நோயாகும். இந்த வைரஸால் உலகளவில் பெரும்பாலான மக்கள் பாதிப்படைந்தனர். மேலும், சிலர் இந்த வைரஸால் தீவிர நோய்வாய்ப்பட்டு மருத்துவ சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதை நிர்வகிக்க உலக சுகாதார அமைப்பு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கோவிட்-19 வைரஸை 2021 ஆம் ஆண்டு கட்டுக்குள் கொண்டு வந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று இயற்கையாக உருவானது அல்ல என அமெரிக்கா தற்போது தெரிவித்துள்ளது.
அதாவது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கீழ் உள்ள “உயர்மட்ட புலனாய்வு அமைப்பின் (CIA) இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப் கோவிட்-19 தொற்றுநோய் இயற்கையான நிகழ்வாக இருப்பதை விட ஆய்வகக் கசிவில் இருந்து தோன்றியிருக்கலாம் என்று CIA ஆய்வுகள் நம்புவதாக கூறினார்”. மேலும், ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்ட கோவிட்-19 தொற்று நோய்க்கான “ஆதாரத்தை வெகு விரைவில் கண்டுபிடிக்க மேம்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்”.

























