அமெரிக்காவிடம் அடிபணிந்த உக்ரைன்..!! ரஷ்யாவுடன் 30 நாட்கள் போர் நிறுத்தம் எனத் தகவல்..!!

0
?????????????? ????????? ???????..!! ?????????? 30 ??????? ???? ????????? ???? ?????..!!
அமெரிக்காவிடம் அடிபணிந்த உக்ரைன்..!! ரஷ்யாவுடன் 30 நாட்கள் போர் நிறுத்தம் எனத் தகவல்..!!

அமெரிக்காவிடம் அடிபணிந்த உக்ரைன்..!! ரஷ்யாவுடன் 30 நாட்கள் போர் நிறுத்தம் எனத் தகவல்..!!

 

பல எதிர்பார்ப்புகளோடு நடந்த ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம், தொடர்பான டிரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி சந்திப்பு படுதோல்வியில் முடித்தது. மேலும், இச்சந்திப்பிற்கு பிறகு, அமெரிக்கா அதிகளவிலான பணத்தை உக்ரைனுக்காக செலவு செய்ததையும், உக்ரைன் போரை நிறுத்த விரும்பவில்லை என்றும் டிரம்ப் விமர்சித்த நிலையில் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்தன. இதை தொடர்ந்து, ஒரு வாரத்திற்கு பிறகு, அமெரிக்காவுடன் ஒத்துழைக்க தயார் என்று அதிபர் உக்ரைன் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றை வெளியிட்டார் . இந்நிலையில் சவுதி அரேபியாவில் நடைபெற்ற அமெரிக்கா – உக்ரைன் பேச்சுவார்த்தை பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு… மார்ச் 31 தான் பதிவு செய்ய கடைசி நாள்… இல்லனா ரேஷன் பொருள் வாங்க முடியாது

அதாவது, ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்கா மற்றும் உக்ரைன் தரப்பினருக்கு இடையே சவுதி அரேபியாவில் நேற்று (11-03-2025) மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் போர் நிறுத்தத்திற்கான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்த 30 நாட்கள் உக்ரைன் போர் நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்ற அமெரிக்காவின் நிபந்தனைக்கு உக்ரைன் தரப்பு சம்மதித்தது. இதனால் முன்னதாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த உக்ரைனுக்கான இராணுவ உதவி மற்றும் உளவுத்துறை தகவல்களை அமெரிக்கா மீண்டும் வழங்க தொடங்கியுள்ளது.

 Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!