Amazon நிறுவனத்தில் சுமார் 1,10,000 பேருக்கு வேலைவாய்ப்பு – புதிய தகவல்!

0
Amazon நிறுவனத்தில் சுமார் 1,10,000 பேருக்கு வேலைவாய்ப்பு - புதிய தகவல்!
Amazon நிறுவனத்தில் சுமார் 1,10,000 பேருக்கு வேலைவாய்ப்பு - புதிய தகவல்!
Amazon நிறுவனத்தில் சுமார் 1,10,000 பேருக்கு வேலைவாய்ப்பு – புதிய தகவல்!

உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் வரவுள்ள பண்டிகை காலத்தை முன்னிட்டு, அதன் இந்திய நிறுவனங்களில் சுமார் 110,000க்கும் மேற்பட்ட பருவகால வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு

அடுத்த மாதத்தில் வர இருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு பல நிறுவனங்கள் தங்களது வியாபாரங்களை அதிகரிக்க துவங்கியுள்ளன. அதனுடன் போட்டியிட்டு கொண்டு ஆன்லைன் விற்பனை தலங்களான இ-காமர்ஸ் நிறுவனங்களும் பண்டிகை கால வியாபாரத்துக்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படக் கூடிய பிளிப்கார்ட் நிறுவனம், பண்டிகை கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் எண் கட்டாயம் – டிச.31 கடைசி நாள்!

இதனை தொடர்ந்து தற்போது உலகின் முன்னணி இ-காமர்ஸ் தளமான அமேசான், பண்டிகை காலத்தை முன்னிட்டு புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாய்ப்புகள் மும்பை, டெல்லி, புனே, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ மற்றும் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அமேசான் நிறுவனத்தில் புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தற்போது அமேசான் நெட்வொர்க்குடன் இணைந்துள்ளனர்.

குறிப்பாக இந்த புதிய வேலைவாய்ப்புகள், அமேசான் நிறுவனம் இந்த மாத தொடக்கத்தில் அறிவித்த 8,000 வேலை வாய்ப்புகளுக்கும் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர வரும் 2025க்குள் நாடு முழுவதும் சுமார் 1 மில்லியன் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அமேசான் திட்டமிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக தான் இந்த பணியமர்த்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில், நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் ஷாப்பிங் ஆர்டர்களை பாதுகாப்பான, நம்பகமான மற்றும் விரைவான விநியோகத்திற்காக அமேசானை நம்பியுள்ளனர் என்று VP செயல்பாட்டாளர் அகில் சக்சேனா குறிப்பிட்டுள்ளார்.

TNPSC 537 காலிப்பணியிடங்கள் – விடைக்குறிப்பு வெளியீடு !

மேலும் 1,10,000க்கும் அதிகமான பணியாளர்கள் எங்கள் நிறைவு, விநியோகம் மற்றும் வாடிக்கையாளர் சேவை திறன்களை வலுப்படுத்த உதவுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமேசானில் இந்த புதிய பணியமர்த்தல் பல்லாயிரக்கணக்கான தனிநபர்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் நிதி சுதந்திரம் ஆகியவற்றை அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மேலும் குறைபாடு உள்ளவர்கள், பெண்கள், இராணுவ வீரர்கள் மற்றும் அடித்தட்டு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க இந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு!

இந்த ஆண்டு, பருவகால பணியமர்த்தல், கடந்த ஆண்டை விட 50% அதிகமான பெண்களையும், கிட்டத்தட்ட 60% அதிகமான மாற்றுத்திறனாளிகளையும் மற்றும் 100% தாழ்த்தப்பட்ட சமூகத்தையும் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் தகவல். இதனிடையே அமேசான் 2021 ஆம் ஆண்டில், இந்தியாவில் அதன் நிறைவு மற்றும் விநியோக வலையமைப்பை விரிவுபடுத்தியது. அந்த வகையில் இந்நிறுவனம் இப்போது 15 மாநிலங்கள், 19 மாநிலங்களில் வரிசை மையங்கள், 1700 அமேசானுக்கு சொந்தமான விநியோக நிலையங்கள் மற்றும் 60க்கும் மேற்பட்ட பூர்த்தி மையங்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!