
தமிழ்நாட்டில் மார்ச் 5 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்…!! மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து முதல்வர் கடிதம்…!!
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் குறித்து ஆலோசிக்க இன்று (25.02.2025) காலை தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதையடுத்து, “தொகுதி மறுசீரமைப்பு காரணமாக தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் வருகின்ற மார்ச் 5 ஆம் தேதி நடத்த உள்ளதாக” தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க கோரி தமிழகத்தின் மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
TNPSC Group II, IIA & IV General Tamil Quiz with Answer || Unit I Section 2 Part B – PDF Download…!!
மேலும், “தமிழ்நாட்டில் எம்.பி களின் எண்ணிக்கை 39 லிருந்து 31 ஆக குறையும் அபாயம் உள்ளதாக” தெரிவித்துள்ளார். மேலும் , “இந்தியாவின் முக்கிய இலக்கான மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுகிறது என்றாலும் மாநிலத்தின் உரிமையை பறிக்கும் செயல்” என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், “அதிக எம்.பி கள் தமிழ்நாட்டில் இருந்தால் தான் மத்திய அரசு தரும் இடையூறுகளான நீட், மும்மொழி கொள்கை மற்றும் நிதி பிரச்சனை ஆகியவற்றிற்கு குரல் கொடுக்க முடியும்” என்றும் தெரிவித்துள்ளார்.

























