
ஆதார் எண்ணை, வாக்காளர் பட்டியலுடன் இன்னும் இணைக்கவில்லையா..?? கொஞ்சம் காத்திருக்காங்க.. பிரத்யேக செயலியை உருவாக்க போகும் மத்திய அரசு..
முன்னதாக வங்கி அல்லது பிற அரசு சார்ந்த எந்தவொரு வேலையையும் முடிக்க அடையாள சான்றுகளை காகிதங்களில் நகல் எடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் தற்போதுள்ள டிஜிட்டல் யுகம் மூலம் அந்த கவலை நீங்கியுள்ளது. மேலும், பொதுமக்களின் அலைச்சலை கருத்தில் கொண்டு மொபைல் மூலம் ஆதார் சேவைகளை வழங்கும் m-Aadhaar என்ற செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பயனர்கள் ஆதாரை அங்கீகரிக்கவும், அருகிலுள்ள பதிவு மையங்கள் கண்டறியவும், ஆதார் பதிவிறக்கம், பயோமெட்ரிக் அங்கீகாரம் பெற, மொபைல் மற்றும் மின்னஞ்சல் சரிபார்ப்பு போன்ற பல அம்சங்களை அணுக இந்த செயலி அனுமதிக்கிறது. இந்நிலையில் அரசு மற்றொரு புதிய ஆதார் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
புதிதாக 10,000 பேருக்கு முதியோர் உதவி தொகை…!! சட்டமன்றத்தில் முதல்வர் வெளியிட்ட முக்கிய தகவல்
அதாவது, இன்று (25-03-2025) தேர்தல் ஆணையம், உள்துறை அமைச்சகம், சட்ட அமைச்சகம், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் UIDAI ஆகிய உயர் அதிகாரிகளுக்கிடையே உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் “பொதுமக்களின் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க பிரத்யேக செயலியை உருவாக்க அனைத்து கட்சிகளும் வலியுறுத்தினர். அத்துடன் பிறப்பு – இறப்பு பதிவேட்டின் அடிப்படையில் தானியங்கி முறையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் வரவிருக்கும் தேர்தல்களுக்கு முன்பு வாக்காளர் பட்டியலில் உள்ள இரட்டைப் பதிவுகளை நீக்கி வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக இந்த சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கட்சி அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்”.

























