Airtel, VI, Jio பயனர்கள் கவனத்திற்கு – பூஸ்டர் பேக் ரீசார்ஜ்! முழு விபரங்கள் இதோ!

0
Airtel, VI, Jio பயனர்கள் கவனத்திற்கு - பூஸ்டர் பேக் ரீசார்ஜ்! முழு விபரங்கள் இதோ!
Airtel, VI, Jio பயனர்கள் கவனத்திற்கு - பூஸ்டர் பேக் ரீசார்ஜ்! முழு விபரங்கள் இதோ!
Airtel, VI, Jio பயனர்கள் கவனத்திற்கு – பூஸ்டர் பேக் ரீசார்ஜ்! முழு விபரங்கள் இதோ!

தினசரி வழங்கப்படும் டேட்டா லிமிட் தாண்டி தற்போது டேட்டா தேவைப்படுகிறது. அதனால் ஏர்டெல், ஐடியா வோடபோன், ஜியோ நிறுவனம் பூஸ்டர் பேக் என்ற கூடுதல் டேட்டாவை வழங்கி வருகின்றனர். இது குறித்து கூடுதல் தகவல்களை பார்க்கலாம்.

பூஸ்டர் பேக்

இந்தியாவில் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஐடியா வோடபோன், ஜியோ போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தொலைதொடர்பு சேவையை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ரீசார்ஜ் திட்டங்களின் விலையை இந்த நிறுவனங்கள் அதிகரித்தது. அதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளானார்கள். இதனை தொடர்ந்து தற்போது வாடிக்கையாளர்களில் பெரும்பாலோனோர் தினமும் வழங்கப்படும் டேட்டா லிமிட் தாண்டி பயன்படுத்தி வருகின்றனர்.

பிப்ரவரி 16 முதல் தொடங்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் – BCCI அறிவிப்பு!

தினசரி லிமிட் முடிந்துவிட்டால் அதன்பிறகு ஏதேனும் முக்கியமான செய்தியை பார்க்கவோ அல்லது வீடியோ பார்க்கவோ முடியாது. இந்த நிலையை தவிர்க்க ஏர்டெல், ஐடியா வோடபோன், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் பூஸ்டர் டேட்டா பேக் திட்டங்களை அறிமுகப்படுத்தினர். தற்போது ஏர்டெல், ஐடியா வோடபோன், ஜியோ நிறுவனங்களில் உள்ள பூஸ்டர் டேட்டா பேக் திட்டங்களில் வழங்கப்படும் பலன்களை குறித்து பார்க்கலாம். ஏர்டெல்லில் ரூ.58 க்கு ரீசார்ஜ் செய்வதன் மூலமாக 3ஜிபி டேட்டா பெற முடியும். அத்துடன் ரூ.98 க்கு ரீசார்ஜ் செய்வதன் மூலமாக 5 ஜிபி டேட்டா பெற முடியும். மேலும் இதில் 98, 108, 118, 148 என்ற ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளது. ஆனால் இதில் 12 ஜிபி, 15 ஜிபி என குறைந்த அளவில் டேட்டா கிடைக்கிறது.

தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் – அடுத்தடுத்து வெளிவரும் மோசடிகள்! குவியும் புகார்கள்!

ஜியோ நிறுவனத்தில் 4 விதமான பூஸ்டர் பேக் திட்டங்கள் உள்ளது. இதில் 1 ஜிபி டேட்டாவை பெற 15 ரூபாய்க்கும், 2 ஜிபி டேட்டாவை பெற 25 ரூபாய்க்கும் ரீசார்ஜ் செய்ய வேண்டும். மேலும் இதில் ரூ.181 ரீசார்ஜ் செய்வதால் 30 ஜிபி டேட்டாவும், ரூ. 241 ரீசார்ஜ் செய்வதால் 40 ஜிபி டேட்டாவும், ரூ.301 ரீசார்ஜ் செய்வதால் 50 ஜிபி டேட்டாவும் 30 நாட்கள் வரை கிடைக்கிறது. வோடபோன் ஐடியா நிறுவனத்தில் ரூ.298க்கு ரீசார்ஜ் செய்வதன் மூலமாக 50 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு பெற முடியும். அத்துடன் ரூ.418 க்கு ரீசார்ஜ் செய்தால் 100 ஜிபி டேட்டாவை 56 நாட்களுக்கு பெற முடியும். இந்த நிறுவனத்தில் குறைந்தபட்ச டேட்டாகளை பெற ரூ.19 முதல் ரூ.108 வரை பூஸ்டர் பேக் திட்டங்கள் உள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!