
AIIMS-ல் Senior Medical Officer காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.1,00,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
AIIMS-All India Institute of Medical Sciences ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Senior Medical Officer, Project Research Scientist-II, Project Technical Support-II பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.1,00,000/- மாத ஊதியம் வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
AIIMS காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Senior Medical Officer, Project Research Scientist-II, Project Technical Support-II பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் DMLT, M.Sc, MD, PhD தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
AIIMS வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30, 35 மற்றும் 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ.75,000/- மாத ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!
ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.1,00,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.
AIIMS தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து pulmonaryproject2021@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.10.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபடாது என தெரிவிக்கபட்டுள்ளது.























