தமிழகத்தில் தேர்தலுக்கு பின்பு பொதுமுடக்கம் – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!!

0
தமிழகத்தில் தேர்தலுக்கு பின்பு பொதுமுடக்கம் - சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!!
தமிழகத்தில் தேர்தலுக்கு பின்பு பொதுமுடக்கம் – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!!

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருவதால் தேர்தலுக்கு பின்பு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று தொடர்ந்து தகவல் வெளிவந்த வண்ணமாக இருந்தது. தற்போது இதற்கு விளக்கமளித்துள்ளார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.

பொதுமுடக்கம்:

தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் மிக தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் தேர்தல் ஆணையத்திற்கு தேர்தலை பாதுகாப்பாக நடத்துவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் கூட தேர்தலில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவதற்கான அனைத்து தரப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் தமிழகத்தில் தேர்தலுக்கு பின்பு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று தொடர்ந்து தகவல் வெளிவந்த வண்ணமாக இருந்து வருகிறது. தற்போது இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, யூகத்தின் அடிப்படியில் நாம் எதையும் சொல்லிவிட முடியாது. கடந்த முறை நம்மிடம் கொரோனவிற்கான தடுப்பூசி எதுவும் இல்லை. ஆனால் இந்த முறை நம்மிடம் தடுப்பூசி உள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக விவசாயிகளுக்கு இன்று முதல் மும்முனை மின்சாரம் – முதல்வர் உத்தரவு!!

ஆனால் அதனை முழுமையாக மக்கள் வந்து போட்டு கொள்வதில்லை. தமிழகத்தில் சுமார் 5000 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தடுப்பூசியை 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் அதனை விரும்புபவர்கள் மட்டும் போட்டு வருகின்றனர். யாரெல்லாம் தடுப்பூசி போட தகுதியானவர்களோ அவர்கள் அனைவரும் தடுப்பூசி போட வரவேண்டும் என்று அறிவுத்தியுள்ளார். மேலும் தேர்தல் கூட்டம், மதச்சார்பு விழாக்கள் கூட்டம் ஆகியவற்றில் கட்டுப்பாடுகளை பின்பற்றாததால் கொரோனா பரவுகிறது என்றும் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here