
இனி 6 வயது நிரம்பினால் மட்டுமே பள்ளிகளில் சேர்க்க முடியும்…!! பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு
மத்திய அரசு தேசிய கல்வி கொள்கையின்படி, 6 வயது நிரம்பியவர்களை மட்டுமே பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என அறிவித்துள்ளது. ஆனால், பெற்றோர்கள் குழந்தை பிறந்து 3 வயதிலேயே எல்கேஜி, யுகேஜி என மழலையர் பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர். மேலும், அவர்களின் 5 ஆம் வயதிலேயே ஒன்றாம் வகுப்பில் சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, “கேரளாவில் உள்ள குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் வயதை 5 லிருந்து 6 ஆக உயர்த்தியுள்ளதாக” தெரிவித்துள்ளார். மேலும், “குழந்தைகள் தங்களுடைய 6 ஆம் வயதில் தான் முறையான கல்விக்கு தயாராவதாகவும் ஆய்வுகள் கூறுவதால், இதுபோன்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும்” தகவல் வெளியிட்டுள்ளார். மேலும், கேரளாவில் உள்ள பள்ளிகளில், இனி குழந்தையின் பிறந்த சான்றிதழ் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

























