ஆதார் அட்டையில் உங்களுடைய புகைப்படத்தை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
ஆதார் அட்டையில் உங்களுடைய புகைப்படத்தை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் அட்டையில் உங்களுடைய புகைப்படத்தை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் அட்டையில் உங்களுடைய புகைப்படத்தை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

நாடு முழுவதும் மக்களின் முக்கிய ஆவணங்களில் ஒன்றான ஆதார் அட்டையில் புகைப்படம் சரியாக இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆதார் அட்டை

இந்தியாவில் உள்ள மக்களுக்கு முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் அட்டை இருக்கிறது. இந்நிலையில் ஆதார் அட்டையில் உள்ள அனைத்து விவரங்களுக்கும் கட்டாயம் சரியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அதனை எங்கும் பயன்படுத்த முடியாது. அதே போல் ஆதாரில் உள்ள உங்களுடைய புகைப்படமும் தெளிவாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் அதனை கட்டாயம் மாற்ற வேண்டும். ஆனால் புகைப்படத்தை மற்ற விவரங்களை போல ஆன்லைனில் மாற்ற முடியாது. அதற்கு நீங்கள் அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்திற்கு செல்ல வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

அங்கு சென்றதும் புகைப்படத்தின் மாற்றம் குறித்து தெரிவிக்கும் திருத்தம் அல்லது புதுப்பிப்பு படிவத்தை கவுண்டரில் வாங்க வேண்டும். அல்லது இந்த படிவத்தை யுஐடிஏஐ இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன் பின் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். பின் ஆதார் நிர்வாகியிடம் உங்களுடைய பயோமெட்ரிக் தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின் ஆதார் மையத்திலேயே புகைப்படங்கள் எடுக்கப்படும்.

ஜெட் வேகத்தில் உயரும் தங்கத்தின் விலை – சவரன் ரூ.360உயர்ந்து ரூ.44,440க்கு விற்பனை!

இதற்கு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பின் புதுப்பிப்பு கோரிக்கை எண் அல்லது URN எண்ணுடன் ரசீது வழங்கப்படும். இறுதியாக யுஐடிஏஐ இணையதளத்தில் இருந்து யுஆர்என் எண்ணுடன் படத்தைப் புதுப்பித்ததா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம். பின் புதிய ஆதாரை 90 நாட்களுக்கு பின் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!