நான்கே நாளில் ரத்தான நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து …!! நிர்வாகம் வெளியிட்ட செய்தியால் பயணிகள் அதிர்ச்சி…!!

0
?????? ?????? ?????? ???? - ?????? ?????? ???????????? ...!! ????????? ????????? ?????????? ??????? ?????????...!!
நான்கே நாளில் ரத்தான நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து ...!! நிர்வாகம் வெளியிட்ட செய்தியால் பயணிகள் அதிர்ச்சி...!!

நான்கே நாளில் ரத்தான நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து …!! நிர்வாகம் வெளியிட்ட செய்தியால் பயணிகள் அதிர்ச்சி…!!

 

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிக்க கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது . ஆனால், கடந்த 2024 ஆம் ஆண்டு வானிலை மாற்றம் மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த  கப்பல் போக்குவரத்து  நிறுத்தப்பட்டது. இதையடுத்து, 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி மீண்டும் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி தொழிற்சாலை…!! 45,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல்…!!

இந்நிலையில், தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 28 ஆம் தேதி வரை கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதாலும், வங்கக் கடலில் பலத்த காற்று வீசி வருவதாலும் கப்பலை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், “இன்று (26.02.2025) முதல் வருகின்ற பிப்ரவரி 28 ஆம் தேதி வரை கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக” கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், “வருகின்ற மார்ச் 1 ஆம் தேதி முதல் கப்பல் போக்குவரத்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து வழக்கம் போல் செயல்படும்” என்றும் தெரிவித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!