தமிழகத்தில் பிப்ரவரி 8 முதல் அனைத்து கல்லூரிகளும் திறப்பு – அரசு உத்தரவு!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பிப்ரவரி 28 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில புதிய தளர்வுகளையும் அரசு அறிவித்துள்ளது. பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளையும் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
புதிய ஊரடங்கு தளர்வுகள்:
தமிழகத்தில் ஜனவரி 31 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தற்போது பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்ட ஊரடங்கு புதிய தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கல்லூரிகளையும் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் பள்ளிகளில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கியுள்ளது.
தமிழக சுகாதாரத்துறையின் கீழ் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி – அரசாணை வெளியீடு!!
பெட்ரோல் பங்க்குகள் நேர கட்டுப்பாடுகள் இல்லாமல் 24 மணி நேரமும் செயல்படலாம். விளையாட்டு போட்டிகளில் 50% இருக்கைகளுடன் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மார்ச் மாதம் முதல் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்பட்டன.
இந்நிலையில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் டிசம்பர் 6 ஆம் தேதி முத்ல் தொடங்கப்பட்டன. கல்லூரிகள் திறக்கப்பட்டு சில நாட்களில் ஐஐடி, அண்ணா பல்கலை மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மற்ற மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பது ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் கட்டுக்குள் வந்ததால் அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் வருகிற பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன.
தேசிய மாணவர் படை (NCC) அணிவகுப்பு – பிரதமர் மோடி புகழாரம்!!
இதன்படி அரசு அறிவித்த கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்படும். கலை, அறிவியில், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான அனைத்து வகுப்புகளும் பிப்ரவரி 8ம் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கியுள்ளது. மாணவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வர அறிவுறுத்தப்படுகின்றனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்