TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வில் பாஸ் ஆகணும்னா இதையும் தெரிஞ்சுக்கோங்க!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 1,2,3 மற்றும் 4 தேர்வுகளை நடத்தி வருகிறது. பொது தமிழில் அதிக மதிப்பெண் பெறுவது மிகவும் முக்கியம்.இதற்கு தேர்வர்கள் முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகளை தெரிந்து கொள்ள வேண்டும். தமிழில் அதிக மதிப்பெண்களை பெற முந்தைய ஆண்டு தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் இதனை பயன்படுத்தி பயனடையவும்.
1. கனி முன் நேர் வருவதும் கனி முன் நிரை வருவதும்
(A) கலித்தளை
(B) வஞ்சித்தளை
(C) இயற்சீர் வெண்டளை
(D) வெண்சீர் வெண்டளை
விடை : (B)
2. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பி தேரினும் அஃதே துணை கீழ்க்காணும் சொற்களுள் எதிர்ச்சொல்லை கண்டறிக:
(A)பரிந்து x வெறுத்து
(B) பரிந்து x விரும்பி
(C) தெரிந்து × உணர்ந்து
(D) தெரிந்து × ஆராய்ந்து
விடை : (A)
3. ‘மூதூர்’ எத்திணைக்குரிய ஊர்?
(A) மருதம்
(B) பாலை
(C) குறிஞ்சி
(D) நெய்தல்
விடை : (A)
டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு.. பொதுத்தமிழ் முந்தைய ஆண்டு வினாக்கள்!!
4. . ‘அழுது அடியடைந்த அன்பர்’ – என்னும் தொடர் யாரைக் குறிக்கிறது?
(A) அருணகிரியார்
(B) சம்பந்தர்
(C) சுந்தரர்
(D) மாணிக்கவாசகர்
விடை : (D)
5. ‘என்றுமுள தென்தமிழ்’ – என்னும் தொடரை இயம்பியவர் யார்?
(A) கம்பர்
(B) பாரதியார்
(C) பாரதிதாசன்
(D) வள்ளலார்
விடை : (A)


























