டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு.. பொதுத்தமிழ் முந்தைய ஆண்டு வினாக்கள்!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 1,2,3 மற்றும் 4 தேர்வுகளை நடத்தி வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு தமிழில் அதிக மதிப்பெண் பெறுவது மிகவும் முக்கியம். இதற்கு தேர்வர்கள் முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகளை தெரிந்து கொள்ள வேண்டும். தற்போது முந்தைய ஆண்டு தேர்வு வினாக்களை கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
1. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக FAX
(A) தொலைநோக்கு இயந்திரம்
(B) தொலைநகல் கருவி
(C) தொலைநகல் இயந்திரம்
(D) தொலைநோக்கு சுருவி
(E) விடை தெரியவில்லை
விடை: (C)
2. பிறமொழிச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொல்லை எழுதுக மாஸ்க்
(A) தலைக்கவசம்
(B) முகமூடி
(C) மூக்கு கவசம்
(D) முகக்கவசம்
(E) விடை தெரியவில்லை
விடை: (D)
3. ஊர்ப்பெயரின் மரூஉவை எழுதுக.
கோயம்புத்தூர்
(A) புத்தூர்
(B) கோவை
(C) கோலன்
(D) கோடை
(E) விடை தெரியவில்லை
விடை: (B)
4. நிறுத்தற்குறிகள் அறிதல் (எது சரியானது)
(A) சேரர்களின் பட்டப் பெயர்களில், கொல்லி, வெற்பன், மலையமான், போன்றவை குறிப்பிடத்தக்கவை.
(B) சேரர்களின் பட்டப் பெயர்களில் கொல்லி, வெற்பன், மலையமான், போன்றவை குறிப்பிடத்தக்கவை!
(C) சேரர்களின் பட்டப் பெயர்களில், கொல்லி வெற்பன் மலையமான், போன்றவை குறிப்பிடத்தக்கவை?
(D) சேரர்களின் பட்டப் பெயர்களில் கொல்லி, வெற்பன், மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
(E) விடை தெரியவில்லை
விடை: (D)
5. பேச்சு வழக்கு, சொற்களை எழுத்து வழக்கு சொற்களாக மாற்றுக.
சிரட்டையில் நீத்துபாகத்தை வடித்து நீட்டினான்
(A) கொட்டாங்குஞ்சியில் சோற்றை வடித்து நீட்டினான்
(B) சிரட்டையில் மேல்கஞ்சியை வடித்து நீட்டினான்
(C) அகப்பையில் நீத்துபாகத்தை வடித்து நீட்டினான்
(D) கரண்டியில் நீத்துபாகத்தை வடித்து நீட்டினாள்
(E) விடை தெரியவில்லை
விடை: (B)
6. சரியான நிறுத்தற்குறிகள் இடப்பட்டத் தொடரைக் கண்டறிக.
(A) அட்டா எவ்வளவு சிற்பங்கள்.
(B) அட்டா, எவ்வளவு சிற்பங்கள்.
(C) அடடா? எவ்வளவு சிற்பங்கள்?
(D) அடடா ! எவ்வளவு சிற்பங்கள்!
(E) விடை தெரியவில்லை
விடை: (D)
7.எழுத்து வழக்குத் தொடரைக் கண்டறிக :
(A) சோலைக்குள் சத்தமில்லாமல் தென்றலு வீசியது.
(B) சோலைக்குள் சத்தமில்லாமல் தென்றல் வீசியது
(C) சோலைக்குள்ளே சத்தமில்லாமல் தென்றலு வீசியது
(D) சோலையிலே சத்தமில்லாமல் தென்றலு வீசியது
(E) விடை தெரியவில்லை
விடை: (B)
8. இலக்கணக் குறிப்பு தருக:
கொள்க, குரைக்க
(A) வினைத்தொகை
(B) பண்புத்தொகை
(C) வியங்கோள் வினைமுற்று
(D) வினையெச்சம்
(E) விடை தெரியவில்லை
விடை: (C)
9. இரு பொருள் தருக
படி
(A) புத்தகம் -பாடுதல்
(B) படித்தல் -நூல்
(C) படிக்கட்டு -படித்தல்
(D) புத்தகம் – மாடிப்படி
(E) விடை தெரியவில்லை
விடை: (C)
10. சரியான இணைப்புச்சொல்லால் நிரப்புக
குயிலுக்குக் கூடுகட்டத் தெரியாது. காக்கையின் கூட்டில் முட்டையிடும்.
(A) அதனால்
(B) ஏனெனில்
(C) அதுபோல
(D) யாது
(E) விடை தெரியவில்லை
விடை: (A)


























