TNPSC தேர்வு எழுத போறீங்களா? – அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுகோங்க !
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது.இத்தேர்வில் தேர்வாகும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுகிறார்கள்.குரூப் 1 தேர்வில் General Studies பாடத்தில் தேர்ச்சி பெறுவது சற்று கடுமையாக உள்ளது.எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் முந்தைய ஆண்டு வினாக்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
1. 2016 ஆம் ஆண்டில் ISRO-வால் விண்ணில் ஏவப்பட்ட இந்திய செயற்கைக்கோள்களின் எண்ணிக்கையானது
(A) 3
(B) 4
(C) 5
(D) 6
விடை : D
2. எவ்வளவு இணைதிறன் எலக்ட்ரான் கொண்ட மகா அணுவை ஜெர்மானியம் படிகத்தில் சேர்க்கும்போது n -வகை குறைக்கடத்தியாக மாறும்
(A) 6
(B) 5
(C) 4
(D) 3
விடை : B
3. ஒலியின் வேகமானது கீழ்க்கண்டவற்றுள் எதில் பெருமமாக இருக்கும்?
(A) தண்ணீரில்
(B) காற்றில்
(C) உலோகத்தில்
(D) வெற்றிடத்தில்
விடை : C
4. கோடை உறக்கம் இவற்றில் நடைபெறுகிறது.
(A) இருநிலை வாழ்விகள்
(B) சிம்பான்சீ
(C) சால்மன்
(D) அணில்கள்
விடை : A
5. சமணசமயத்தின் இருபத்தி இரண்டாவது தீர்த்தங்கரர்
(A) ரிஷபர்
(B) பத்ரபாகு
(C) பார்சவா
(D) நேமிநாதா
விடை : D


























