
இன்னும் 2 நாட்களில் பள்ளிக்கல்வித்துறையில் நடக்க போகும் மாற்றம்.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
அரசு பள்ளி ஆசிரியர்களின் பணிகளில் மாவட்ட ஆட்சியர்களின் தலையீடு அதிகமாக உள்ளதை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் தெரிவித்திருந்தது. இதை கண்டித்து பொதுக்குழு கூட்டம் விருதுநகரில் மே 21 ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதல் நிலை ஆசிரியர்களுக்கு மே மாத விடுமுறையை உறுதி செய்தல், அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களின் காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
TNPSC Group II, IIA & IV General Tamil Quiz with Answer || Unit 8 Section 6 Part A – PDF Download…!!
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் வெளியிட்ட அறிக்கையில்,”தமிழக பள்ளிக்கல்வித்துறை 2024-25 கல்வியாண்டின் படி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்ய அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்தும் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது. அந்த விவரங்களின் அடிப்படையில், உபரி என கண்டறியப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை அந்த மாவட்டத்திற்குள் நிரப்ப தகுந்த காலிப்பணியிடம், கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் மூலம் அனுப்ப முதன்மை கல்வி அலுவலரால் வருகிற மே 26 ஆம் தேதி கலந்தாய்வு நடத்தி முடிவெடுக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த பணிநிரவல் கலந்தாய்வில், “மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர், விதவைகள் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், குறிப்பிட்ட பாடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட 2 முதுகலை ஆசிரியர்கள் இருக்கும் பட்சத்தில் அவருக்கு பதிலாக அதே பள்ளியில் உள்ள அடுத்த வயது குறைந்த ஆசிரியரை உபரியாக தேர்வு செய்து பணி நிரவலுக்கு உட்படுத்தபடுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Join the ExamsDaily Whatsapp Group

























