ஆசிய கோப்பை தொடர்களில் இருந்து விலகிய இந்தியா.. BCCI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
ஆசிய கோப்பை, கிரிக்கெட் தொடரானது 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் போட்டியாகும். இந்த தொடர் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைமையில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டுக்கான ஆசிய கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீரில் நிகழ்ந்த பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது.
தமிழகத்தில் இன்று இந்தந்த மாவட்டங்களில் கனமழை பொழியும்.. வானிலை மையம் எச்சரிக்கை..!!
இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிய நிலையில் கடந்த மே 10 ஆம் தேதி இரு நாடுகளும் தாக்குதல் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. இதை தொடர்ந்து, தற்போது “இந்தியா- பாகிஸ்தான் மோதல் எதிரொலியாக ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஆசிய கிரிக்கெட் சங்கத் தலைவராக பாகிஸ்தான் அமைச்சர் மொஸின் நக்வி இருப்பதால் BCCI இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது”.
























