
சிலிண்டர் வாங்குவதில் கெடுபிடி…!! இனி இவர்களுக்கெல்லாம் சிலிண்டர் வழங்கப்படாது என அதிரடி கட்டுப்பாடு..!! முழு விவரம் உள்ளே…!!
வீடுகளில் சிலிண்டர் பயன்படுத்துபவர்கள், ஒரு சிலிண்டர் முடிந்ததும் மற்றொன்றை புக் செய்து வாங்கி பயன்படுத்துகின்றனர். மத்திய அரசும் ஒரு ஆண்டில் அவர்கள் வாங்கும் முதல் பன்னிரண்டு சிலிண்டர்களுக்கு மானியம் வழங்குகிறது. இந்நிலையில், சிலிண்டர் பெறுவதில் புதிய கட்டுப்பாடு ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவோருக்கு ஜாக்பாட்…!! வெளியான அசத்தல் அறிவிப்பு…!! இனி உங்க காட்டுல மழை தான்…!!
அதாவது, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆண்டிற்கு, 15 சிலிண்டர்களுக்கு மேல் வாங்குபவர்களுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி உங்கள் பதிவை ஏற்க முடியாது என்று தெரிவிக்கிறதாம். வீட்டு உபயோக சிலிண்டர் வேறு காரணங்களுக்கு பயன்படுவதை தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பதிவு கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் அருகிலுள்ள கேஸ் ஏஜென்சிக்கு சென்று உரிய காரணத்தை எழுதி கொடுத்து சிலிண்டர் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


























