
அடுத்த 3 நாட்கள் அனைத்து ATM-களும் மூடப்படும்.. இணையத்தில் பரவும் வைரல் செய்தி.. அரசு தரப்பில் வெளியான விளக்கம்..!!
இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக சமூக வலைதளங்களில் பல்வேறு தவறுதலான தகவல்கள் பரவி வருகிறது. அந்த வகையில் அடுத்த 2-3 நாட்களுக்கு அனைத்து வங்கி ATM-களும் மூடப்படும் என்று கூறி WhatsApp செய்தி ஒன்று இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இணையதளங்களில் வைரலாகி வரும் இந்த தவறான செய்தி, சில பயனர்களிடையே கவலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் “பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) ஆனது இந்தத் தகவலை புறக்கணிக்க வேண்டும் என்றும், இதுபோன்ற சரிபார்க்கப்படாத செய்திகளை பொதுமக்கள் மேலும் பகிர வேண்டாம் எனக்கூறி வலியுறுத்தியுள்ளது”.
மேலும், “இந்திய அரசு சார்பில் அதிகாரபூர்வ உண்மைகளை சரி பார்க்கும் PIB நிறுவனத்தின் விளக்கம் மக்கள் மத்தியில் நிலவிய தேவையற்ற பதற்றத்தை தவிர்த்து உள்ளது. இதை தொடர்ந்து, ATM சேவைகள் வழக்கம்போல் தடையில்லாமல் இயங்கும் என்றும், சமூக ஊடகங்களில் வைரலாகும் செய்திகளின் உண்மை நிலையை சரி பார்க்க PIB அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவித்துள்ளது”.























