
சொந்த தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வேணுமா..?? ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கும் அரசு.. கண்டிப்பாக இதை பற்றி தெரிஞ்சுக்கோங்க..!!
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இளைஞர்களுக்கான சுய தொழில் வாய்ப்புகளை அதிகரிக்க தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் முதலமைச்சர் “யுவ உத்யமி அபியான் யோஜனாவின்” கீழ், வட்டி மற்றும் எந்த உத்தரவாதமும் இல்லாமல் இளைஞர்களுக்கு ரூ.5 லட்சம் வரை கடன்கள் வழங்கப்படுகிறது. மேலும், 21 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களையும், பெண்களையும் சுயசார்புடையவர்களாக மாற்றி சொந்தமாகத் தொழில் தொடங்க ஊக்குவிப்பதே ‘மந்திரி யுவ உத்யமி அபியான் யோஜனா’ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பயனாளிகள் சுய தொழில் தொடங்கி, சமூகத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் வகையில் அரசு நிதியுதவி வழங்குகிறது என்று தொழில்துறை துணை ஆணையர் அனில் குமார் தெரிவித்துள்ளார். மேலும், “இத்திட்டத்திற்கான விண்ணப்ப செயல்முறையை எளிதாக்க, மே 7 ஆம் தேதி காலை 11 மணி முதல் உத்தரப்பிரதேசம் கிரேட்டர் நொய்டாவின், சித்தேரா கிராமத்தில் உள்ள கனரா வங்கியில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் பங்கேற்க விரும்புவபர்கள் ஆதார் அட்டை, பான் அட்டை, கல்வித் தகுதிச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வங்கி பாஸ்புக் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற தேவையான ஆவணங்களை வைத்து விண்ணப்பிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

























