
பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடரும்.. மத்திய அமைச்சர்கள் தெரிவித்த அதிரடி தகவல்..!!
கடந்த மாதம் காஷ்மீர் உள்ள பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் நேற்று (07-05-2025) ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் தொடர்பாக புதுடெல்லியில் உள்ள நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் இன்று (08-05-2025) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. மேலும், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் நடைபெற்ற இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் “ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில், இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானில் 31 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் கூறி வரும் நிலையில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 100 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார்”. மேலும், “பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாமிட்டிருக்கும் 9 நகரங்களை குறி வைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் தீவிரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் தொடரும்” என மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளனர்.


























