
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல்…!! குழப்பத்தில் மாணவர்கள்..!!
தமிழகத்தில் 10,11,மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கடந்த மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தன. அதன் பின், தற்போது தேர்வு தாள்களை திருத்தும் பணியானது தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற்று வருகிறது. மேலும், அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத பொழுதிலும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வரும் மே 7 ஆம் தேதி வெளியாகும் என்று செய்திகள் உலா வந்தன. இந்நிலையில், இந்த தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் வரும் மே 7 தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!! எந்த மாவட்டத்திற்கு தெரியுமா..?
அதாவது, இந்த 12 ஆம் வகுப்பு தேர்வு தாள்கள் திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது அதனை பதிவேற்றும் வேலை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதனை பதிவேற்றுவதில் சற்று கால தாமதம் ஆவதால் மே 11 தேதி தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.























