IPL 2025: பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா RCB..??  மீண்டும் இன்று சென்னையுடன் மோதல்..!!

0
IPL 2025: ???? ???? ?????????? ????? ?????? RCB..?? ???????? ????? ??????????? ?????..!!
IPL 2025: பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா RCB..?? மீண்டும் இன்று சென்னையுடன் மோதல்..!!

IPL 2025: பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா RCB..??  மீண்டும் இன்று சென்னையுடன் மோதல்..!!

18வது IPL தொடரில் விறுவிறுப்பான இரண்டாம் கட்ட போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (03-05-2025) பெங்களூருவில் நடைபெறும் 52-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. மேலும், இந்த சீசனில் பெங்களூரு அணி விளையாடிய 10 போட்டிகளில் 7 இல் வெற்றி பெற்று தொடரில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மறுபுறம் சென்னை அணி விளையாடிய 10 போட்டிகளில் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வென்று பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது.

உடனடி பண தேவையா..?? ரூ.12 லட்சம் வரை கடன் வழங்கும் கூகுள் பே.. விண்ணப்பிக்கும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க..!!

இதை தொடர்ந்து, சின்னசாமி மைதானத்தில் முதல் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்த பெங்களூர் அணி, கடைசியாக நிகழ்ந்த 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்றால் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை தக்கவைப்பது மட்டுமல்லாமல், பிளே ஆஃப் போட்டிக்கு தகுதி பெறும் முதல் அணியாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், CSK-வை தோற்கடிப்பதன் மூலம் தங்கள் வெற்றிப் பயணத்தை தக்க வைத்துக் கொள்ள பெங்களூர் அணி தீவிர பயிற்சி மேற்கொள்வதாக கூறப்பட்டுள்ளது. எனவே இன்றைய போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!