
“இனி அமெரிக்காவிற்கான ஐபோன்களை இந்தியா தயாரிக்கும்”.. ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி விடுத்த முக்கிய அறிவிப்பு..!!
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் பிற நாடுகளின் பொருட்களுக்கான வரி விகிதங்களை அதிரடியாக உயர்த்தினர். அந்த வகையில் 50-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் மீது 11 – 50 % வரையிலான பதில் வரிகள் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த சீனா, அமெரிக்காவின் இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பதாக அறிவித்தது. இதனால் கோபமடைந்த டிரம்ப், சீனாவின் மீதான வரியை மீண்டும் மீண்டும் உயர்த்தியதால் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் தீவிரம் அடைந்தது.
இதன் தொடர்ச்சியாக, “இனி அமெரிக்கச் சந்தைகளில் விற்கப்படும் ஐ போன்களை தயாரிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்”. மேலும், பல ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களை தயாரிக்க சீனாவையே நம்பியிருந்த நிலையில், அந்நாட்டின் மீது டிரம்ப் விதித்த அடுத்தடுத்த வரி விதிப்பால் இந்த முடிவை ஆப்பிள் நிறுவனம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

























