இனி PF பேலன்ஸ் தெரிஞ்சுக்க இதை செய்தலே போதும்.. EPFO வெளியிட்ட எளிய வழிமுறைகள்..!!
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது மத்திய அரசால் நடத்தப்படும் ஓய்வூதியத் திட்டமாகும். மேலும், இத்திட்டத்தின் மூலம் EPFO உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் நிறுவனமும் ஓய்வூதிய நிதி கணக்கில் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்கிறார்கள். இதை சரிவர நிர்வகிக்க பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பை (EPFO) அரசு வடிவமைத்தது. இந்த அமைப்பானது கடந்த சில மாதங்களில் பயனாளர் வசதிக்காக பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், முன்னர் இருந்த சிக்கல்கள் பலவற்றை நீக்கி மிகவும் எளிய முறையில் பணத்தை எடுப்பதற்கும், PF இருப்புத் தொகையை அறிந்து கொள்வதற்கும் வழிவகை செய்துள்ளது.
அந்த வகையில் “உங்களது PF இருப்புத்தொகையை UAN நம்பர், UMANG செயலி மற்றும் SMS வாயிலாகவும் நீங்கள் PF பேலன்ஸை அறிந்து கொள்ளலாம்”. UAN நம்பர் மூலம் பேலன்ஸ் தெரிந்துகொள்ள EPFO வலைத்தளத்திற்கு சென்று லாகின் செய்து “Member Passbook” விருப்பத்தை கிளிக் செய்தால் உங்களது ஆதார் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பருக்கு OTP அனுப்பப்படும். அந்த OTP-யை என்டர் செய்து உங்களது PF பேலன்ஸை அறிந்து கொள்ளலாம். இதுவே UMANG செயலி மூலம் PF பேலன்ஸ் செக் செய்ய கூகுள் பிளே ஸ்டோரில் UMANG செயலியை டவுன்லோட் செய்து EPFO என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும். அதன் பின்னர் “Employment services” என்பதை கிளிக் செய்து “View Passbook” என்பதை தேர்வு செய்து OTP-யை உள்ளீடு உங்களது “Passbook” யை “Download” செய்து PF பேலன்ஸை பார்த்துக் கொள்ளலாம். இறுதியாக SMS வாயிலாக PF பேலன்ஸை தெரிந்து கொள்ள உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணிற்கு “EPFOHO UAN ENG” என்ற பார்மெட்டில் SMS அனுப்பி PF பேலன்ஸை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
























